Header Ads



முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள், IS இல் இலங்கையர்கள் இல்லை - அடித்துக்கூறும் ராஜித்த

இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்ட இலங்கையர்கள் பற்றியோ அவ்வாறான அமைப்புகள் இலங்கையில் மத போதனைகளை நடத்துவது குறித்தோ எந்த தகவல்களும் வெளியாகவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இரகசிய பாதுகாப்பு அறிக்கைகளை அடிப்படையாக கொண்டே தான் இதனை கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று -23- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொண்டதாக தகவல் வெளியாகியது.

அவர்கள் நீண்டகாலத்திற்கு முன்னர் இலங்கையை விட்டு சென்று வெளிநாடு ஒன்றில் வசித்து வந்தவர்கள் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த 32 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் அண்மையில் கூறியிருந்தார்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கூறியது பொய்யா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித,

இதற்கு தான் நேரடியான பதிலை வழங்காது போனால், நாளைய தினம் பத்திரிகைகளில் ராஜபக்ச பொய் கூறினார் - ராஜித கூறுகிறார் என்று செய்தி வெளியாகும். இதனால், விஜயதாச ராஜபக்ச பொய் கூறினார் என்று நான் சொல்ல மாட்டேன்.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இலங்கையர்கள் எவரும் இணைந்து கொள்ளவில்லை என்பது மாத்திரம் கூறமுடியும்.வெளிநாடுகளில் இருந்து வந்து அடிப்படைவாத அமைப்புகளில் பிரதிநிதிகள் போதனைகளை நடத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டும் பொய்யானது. இலங்கை முஸ்லிம்கள் தேசப்பற்று மிக்கவர்கள். அவர்கள் தேசிய பாதுகாப்புக்கு பங்களிப்புச் செய்துள்ளனர்.

பேருவளை பிரதேசத்திற்கு வந்தவர்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி, அவர்கள் நாட்டுக்குள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் அவர்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர்.

இதனடிப்படையில், அடிப்படைவாத அமைப்புகளின் பிரதிநிதிகள் இலங்கையில் போதனைகளை நடத்துவது குறித்த எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Dear Minister Raajitha,
    Thank you for your words while our (Money counting) MPs & Ministers are sleeping...
    However, kindly note that the ISIS is not the ISLAMIC FUNDAMENTALIST..
    ISIS is the pure terrorist groups made by USA & Israel....They are holding the Muslim name to cheat the muslims & Islam
    Pls kindly change as ISIS is the Universal Terrorist group...
    They don't have any single habbit of Islam...pls

    ReplyDelete

Powered by Blogger.