Header Ads



இளவயதுத் திருமணமா? GSP பிளஸா? (முஸ்லிம் சட்டம் பற்றிய சிங்கள ஊடகவியலாளரின் கண்ணோட்டம்)

சிங்­க­ளத்தில்: கே. சஞ்­சீவ தமிழில்: ஏ.எல்.எம். சத்தார் விடிவெள்ளி

கடந்த நவம்பர் 3 ஆம் திகதி கொழும்பு மாளி­கா­வத்­தையில் அபூர்­வ­மான ஆர்ப்­பாட்டப் பேர­ணி­யொன்று இடம்­பெற்­றது. அதனை ‘ஸ்ரீ லங்கா தௌஹித் ஜமாஅத்’ என்ற இஸ்­லா­மிய அமைப்­பொன்றே ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.  அதில்  மிக அபூர்­வ­மான வாச­கங்கள் அடங்­கிய சுலோக அட்­டை­களைக் காணக் கூடி­ய­தாக இருந்­தன. “திரு­ம­ணத்­திற்கு வய­தெல்லை நிர்­ண­யிப்­பது சாத்­தி­ய­மா­காது”, “முஸ்லிம் பெண் பரு­வ­ம­டைந்தால் அவ­ளது விருப்­பத்தின் பேரில் அவள் விரும்­பிய ஒரு­வரை மணம் முடிப்­ப­தற்கு அவ­ளுக்கு பூரண உரிமை உண்டு”, “வெனி­சி­யூலா நாட்டின் ஆண், பெண் இரு­பா­லா­ரதும் திரு­மண வய­தெல்லை பன்­னி­ரண்­டாகும்” “இது மனித உரிமை மீறலா?”  ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் ஏந்­தி­யி­ருந்த சுலோக அட்­டை­களில் என் மனதில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­திய சில வாச­கங்­க­ளையே மேலே கண்­டீர்கள். இந்த ஆர்ப்­பாட்­டத்தின் மூலம் அவர்கள் கோரு­வது என்ன? இவ்­வாறு கோரு­வ­தற்குக் கார­ண­மென்ன? இதன் பின்­ன­ணியைப் பார்ப்போம்.

பின்­னணி
இலங்­கையில் மனித உரி­மைகள் திருப்­தி­க­ர­மாக இல்லை என்­பதைக் காரணம் காட்டி, 2010 ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல், இலங்­கைக்­கான ஜீ.எஸ்.பி. வரிச்­ச­லு­கையை ஐரோப்­பிய யூனியன் இடை நிறுத்திக் கொண்­டது. இதற்கு முன்னர் வழங்­கப்­பட்­டி­ருந்த வரிச் சலுகை கார­ண­மாக வரி அற­வீடு இல்­லாமல் ஒரு சில பொருட்­களை ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்யும் வாய்ப்பு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. அதனால் குறைந்­த­ள­வான போட்டித் தன்­மை­யோடு வரி இல்­லாத விலையில் எமது பொருட்­களை ஐரோப்­பிய சந்­தையில் விற்­ப­னைக்கு விடக்­கூ­டிய சந்­தர்ப்பம் இருந்­தது.

ஆனால் குறித்த வரிச்­ச­லுகை நீக்­கப்­பட்­டதன் பின்பு ஐரோப்­பிய வர்த்­தகச் சந்­தையில் மிகவும் கூடிய போட்டித் தன்­மைக்கு எமது நாடு முகம் கொடுக்கும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டது. அதனால் எமது வர்த்­தக வாய்ப்பு அங்கு குறு­கி­யது. இதன் விளை­வாக எமது நாட்டு பொரு­ளா­தாரம் பெரிதும் பின் தள்­ளப்­பட்­டது. குறிப்­பாக பெரும்­பா­லான ஆடைத் தொழிற்­சா­லைகள் செய­லி­ழந்­தன. இந்தப் பாதிப்­பி­லி­ருந்து மீண்டும் வரிச்­ச­லுகை பெற்று நாட்டை மீள் எழுச்சி பெறச் செய்­வ­தற்­காக நாட்டில் மனித உரிமை விட­யத்தில் திருப்தி ஏற்­பட வேண்டும் என்று ஐரோப்­பிய யூனியன் கேட்டுக் கொண்­ட­தோடு, பல நிபந்­த­னை­க­ளையும் முன்­வைத்­தது. கடந்த அர­சாங்கம் கூட ஐரோப்­பிய யூனி­யனின் நிபந்­த­னை­களைப் புறக்­க­ணித்தே வந்­தது.

பத­விக்கு வந்­துள்ள புதிய அர­சாங்கம் ஐரோப்­பிய யூனி­ய­னோடு பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யது. அதன் விளை­வா­கவே  நிபந்­த­னை­களை முன்­வைத்­தி­ருக்­கி­றது. அவற்றுள் முத­லா­வ­தாக "நாட்டில் மனித உரி­மைகள்  மேலோங்க வேண்டும்” என்ற நிபந்­தனை நாட்­டுக்கு மிகவும் நல்­ல­துதான். இதனை அர­சாங்கம் ஏற்று நடக்க வேண்டும்.

மற்­றொரு நிபந்­த­னை­யாக முன்­வைக்­கப்­பட்­டி­ருப்­பது “முஸ்லிம் திரு­மணம்” தொடர்­பாக அமுலில் உள்ள விசேட சட்டம் திருத்­தப்­பட வேண்டும்” என்­ப­தாகும். முஸ்லிம் திரு­மண சட்­டத்­தி­லுள்ள இள வயதுத் திரு­மணம் இன்று மனித உரி­மைக்குப் பெரும் சவாலாக விளங்குவதோடு நவீன உல­குக்குப் பெரும் பாதிப்­பாகவும் அமை­வதால் நவீன உல­குக்குப் பொருத்­த­மாக அமையும் வகையில் அதனை மாற்­றி­ய­மைக்கும் படி குறித்த நிபந்­த­னையில் கேட்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இதனை  இலங்கை அரசு ஏற்றுக் கொண்­டி­ருக்­கி­றது. அவ்­வா­றி­ருக்க இதற்கு ஏழு வரு­டங்­க­ளுக்கு முன்னர் குறித்த விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மாற்­றங்கள் செய்­வ­தற்­காக முன்னாள் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான ஒரு குழு நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­தது. அக்குழுவால் இது­வ­ரையும் எந்த அறிக்­கையும் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. மீண்டும் அது பரி­சீ­ல­னைக்கு விடப்­பட்­டி­ருப்­ப­தாக அறிய முடி­கி­றது. இந்த நிலை­யில்தான் முஸ்லிம் அடிப்­ப­டை­வாதக் குழு­வொன்று வீதியில் இறங்­கி­யி­ருக்­கி­றது.

இந்தக் குழு முழு முஸ்லிம் சமூ­கத்­தை­யுமே முன்­னி­லைப்­ப­டுத்திக் கொண்டு கொந்­த­ளிப்பு நிலை­யொன்றைத் தோற்­று­வித்­தி­ருக்­கி­றது. அதன் வெளிப்­பா­டா­கவே கடந்த 3 ஆம் திகதி இடம்­பெற்ற ஆர்ப்­பாட்­ட­மாகும். அதன்­போது ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் பொதுச் செய­லாளர் ஆர். அப்துல் ராஸிக் நிகழ்த்­திய உரையில் கலகொட அத்தே ஞான­சார தேரரை தனது ஒரே வயிற்று சகோ­தரர் என்று குறிப்­பிட்டார். அந்த உரை இக்­கட்­டு­ரையில் பின்னர் இடம்­பெறும்.

திரு­மணம் பற்­றிய முஸ்லிம் சட்டம் என்ன?
இந்த நாட்டில் நடை­மு­றை­யி­லுள்ள முஸ்லிம் தனியார் சட்டம் 1801 ஆம் ஆண்­ட­ளவில் வெள்­ளைக்­காரர் ஆட்­சி­யின்­போது அமு­லுக்கு வந்த பழ­மை­யான சட்­ட­மாகும். அதன் பின்னர் 1951 ஆம் ஆண்டின் 1951 –13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் என்ற அடிப்­ப­டையில் தனியார் சட்­ட­மாக திருத்­தி­ய­மைக்­கப்­பட்­டது. உண்­மை­யி­லேயே இந்த சட்­டத்தின் அடிப்­படை மூல கர்த்­தா­வாக இருப்­பது சர்வ வல்­லமை பொருந்­திய அல்லாஹ், அல்­குர்ஆன், நபிகள் நாய­கத்தின் போத­னைகள் என்­ப­ன­வாகும். இங்கு நாம் குறிப்­பி­டக்­கூ­டிய விட­யத்­துடன் சம்­பந்­தப்­ப­டு­வது மேற்­படி சட்­டத்தின் 47 (1) (i) உறுப்­பு­ரை­யாகும். இதில் பல­தார மணம் புரியும் உரிமை, சீதனம் முறை என்­ப­வற்­றுக்கு பெண்­ணொ­ரு­வரால் தீர்­மானம் எடுக்கும் உரிமை குறித்தும் எதுவும் பேசப்­ப­டு­வ­தில்லை.

இது முன்­னேறி வரும் சமூ­கத்­துக்கு நல்­ல­தல்ல. அந்த சரத்தில் குறிப்­பி­டப்­பிட்­டி­ருப்­பது முஸ்லிம் திரு­மண சட்­டத்தில் மணம் முடிப்பவர் இருவரும் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்பதாகும். அத்துடன் திரு­மண வய­தெல்லை குறிப்­பி­டப்­ப­டாத நிலையில் 12 வய­துக்குக் கீழ்­பட்ட பெண் என்றால் குறித்த பிர­தேச காதியின் அனு­ம­தி­யோடு மணம் முடித்து வைக்­கலாம் என்று கூறு­கி­றது. குர்ஆன் கூறு­வ­தைத்தான் இதிலும் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றது. அதா­வது பெண் ஒருவர் பரு­வ­ம­டைந்­ததும் திரு­மணம் முடிக்­கலாம் என்­ப­துதான் அந்த விதி­மு­றை­யாகும். குர்­ஆனின் இந்த வாக்­கி­யத்­திற்கு சிறு துளி “ஐஸிங்’ வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அதா­வது 12 வய­துக்குக் கீழ் என்றால் காதியின் அனு­ம­தி­யோடு நிறை­வேற்­றலாம் என்­ப­துதான் அது.

இன்று உலகில் பெண் பிள்­ளைகள் பரு­வ­ம­டையும் வயது எல்லை குறித்து எண்ணிப் பார்க்­கையில் இந்­தச்­சட்டம் எவ்­வ­ளவு தூரம் மனித உரி­மையைப் பாதிக்கச் செய்­கி­றது என்­பதைப் புரிந்து கொள்­ளலாம். இந்த விடயம் குறித்து பொது­வா­க­வுள்ள சட்­டத்தைப் பார்ப்போம், பொது­வா­க­வுள்ள விவாக, விவா­க­ரத்து சட்ட மூலத்தின் 1995  இலக்கம் 18 ஆம் திருத்­தத்­திற்­க­மைய திரு­மணம் முடிக்க ஆகக் குறைந்த வயது 18 ஆகும்.

அது ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் பொது­வா­ன­தாகும். அத்­துடன் இந்தச் சட்டம் இலங்­கையின் ஏனைய இனத்­த­வர்­க­ளுக்கும் உரித்­து­டை­ய­தாகும். மேலும் மலை­நாட்டு சிங்­க­ள­வர்­க­ளுக்­கான திரு­மணம் தொடர்­பான சட்டம் ஒன்று இருந்த போதிலும் அது தற்­போது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இருந்த போதிலும் அந்த சட்­டத்­திலும் இளம் வயதுத் திரு­ம­ணத்­திற்கு இட­மில்லை.

மறு­பு­றத்தில் இலங்­கையின் பொதுச் சட்­ட­மா­க­வுள்ள குற்­ற­வியல் தண்­டனைச் சட்டக் கோவையில் 16 வய­துக்குக் குறைந்த பெண் பிள்­ளை­யோடு அவ­ரது விருப்­பத்­து­ட­னா­யினும் பாலியல் தொடர்பு புரிந்­தால் அது வன்­பு­ணர்வுக் குற்­ற­மாகக் கரு­தப்­பட்டு தண்­ட­னைக்­குட்­ப­டு­கி­றது. அதற்­காக ஏழு வரு­டங்கள் முதல் 20 வரு­டங்கள் வரை­யி­லான சிறைத் தண்­ட­னைக்கு இலக்­காக்­கப்­ப­டு­கிறார்கள்.

இந்தத் தண்­டனை விதி­முறை முஸ்­லிம்­க­ளுக்கு வழங்க அவர்­க­ளது தனியார் சட்டம் இடம் கொடுப்­ப­தில்லை. 16 வய­துக்­குட்­பட்ட முஸ்லிம் மங்­கை­யொ­ருவர் வன்­பு­ணர்­வுக்­குள்­ளா­னாலும் அவர்­க­ளது தனியார் சட்­டத்தின் படி குற்­ற­வா­ளிக்கு குறித்த தண்­டனை வழங்க முடி­வ­தில்லை. அதனால் இந்த தனியார் சட்டம் ஒரு­வ­கையில் மனித உரிமை கோரு­வ­தற்கு ஒரு பெண்­ணுக்­கு­ரிய உரிமை பறிக்­கப்­ப­டு­வ­துடன் இலங்­கையின் பொதுச் சட்­டத்­துடன் மோதக்­கூ­டிய நிலை­யையும் காண முடி­கி­றது.  

இந்த  முஸ்லிம் தனியார் சட்டம் சர்வ வல்­லமை பொருந்­திய அல்­லாஹ்­வினால் உரு­வாக்­கப்­பட்ட சட்டம் என்ற நம்­பிக்­கையே பொது­வாக  முஸ்லிம் சமூ­கத்­திடம் நில­வு­கி­றது. அதனால் அல்­லாஹ்வின் விருப்­பத்தின் பேரி­லே­யேதான் மாற்ற முடியும் என்­பது முஸ்­லிம்­களின் கருத்­தாக உள்­ளது. 

ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாஅத் பொதுச் செய­லாளர்  ஆர்.அப்துல் ராஸிக்கின் கருத்தைப் பார்ப்போம்.  

முடி­யு­மானால் மாற்றிப் பார்க்­கட்டும் 
''விவாகம், விவா­க­ரத்து, சொத்­து­ரிமை, வாரி­சு­ரிமைச் சட்­டங்கள் யாவும் எங்கள் உரிமை. இவை எங்கள்  தலை­வர்கள் உயிர் தியாகம் செய்து, பெற்­றுக்­கொண்ட உரி­மை­க­ளாகும். இவற்றை இல­கு­வாக மாற்றிக் கொள்ள முடி­யாது. இது எல்லாம் வல்ல அல்­லாஹ்வின் விருப்­பத்­திற்­கு­ரி­ய­தாகும். நபி­க­ளாரின் போத­னை­யு­மாகும். 1994 ஆம் ஆண்டு ஆட்­சி­ய­மைக்க  எமது தலை­வர்கள் பங்­க­ளிப்புச் செய்­தார்கள். அதே­போன்றே 2015 ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வெற்­றி­பெறச் செய்­யவும் நாம் கைகொ­டுத்தோம். அந்த உத­வி­க­ளை­யெல்லாம் இன்று இந்த அரசு மறந்­து­விட்­டது. இந்த ஜி.எஸ்.பி. வரிச்­ச­லுகை என்­பது மாடும்,தென்னை  ஓலையும் போன்­றது. நாட்டின் சுயா­தி­பத்­தி­யமே எங்­க­ளுக்கு முக்­கி­ய­மாகும். அது இல்­லாமல் போவ­தென்றால் இந்த வரிச்­ச­லுகை எதற்கு?'' 

இது நவம்பர் 3 ஆம் திகதி இடம் பெற்ற ஆர்ப்­பாட்­டத்தின் போது அப்துல் ராஸிக் வெளி­யிட்ட கருத்­துக்­களின் ஒரு பகு­தி­யாகும். தொடர்ந்தும் அவர், இள­வ­யதுத் திரு­ம­ணத்தை ஆத­ரித்து கூறி­ய­தா­வது, 

''பெண் பிள்ளை ஒருவர் மணம் முடிப்­ப­தற்கு பூப்­பெய்த வேண்டும். அதுதான் திரு­மண வய­தெல்­லை­யாகும். பூப்­பெய்­தாமல் மணம் முடித்து என்ன பயன்? பெண்ணை மண­மு­டிப்­பது தம் தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­கே­யாகும். அது முடி­யாது விட்டால் ஏன் மணம் முடித்­துக்­கொள்ள வேண்டும்? அப்­ப­டி­யி­ருக்க விவா­கத்­திற்கு வேறு எந்த வகையில்  வய­தெல்­லையை நிர்­ண­யிக்க முடியும்? இன்று 10 வய­துள்ள ஒரு பிள்­ளை­யிடம் கேட்­டுப்­பா­ருங்கள். மணம் முடித்தால் எப்­படி நடந்து கொள்­வது? என்று கேட்டால் 55 வய­து­டை­யவர் சொல்­வ­தை­வி­டவும் இவர்கள் அந்த விடயம் குறித்து அழுத்தம் திருத்­த­மாக பகர்ந்­து­வி­டு­வார்கள். விவாகம் புரிய ஆகக் குறைந்த வய­தெல்­லை­யாக 18 வயதை நிர்­ண­யிக்­கி­றார்கள்.

இந்த வயதை அடை­வ­தற்குள் பிள்­ளைகள் எத்­த­னையோ பேர் தவ­றான வழியில் சென்று விடு­வார்கள்.'' அவர் மனித உரி­மைக்கு எதி­ரான தம் கருத்தை நிறுவு­வ­தற்கு  இவ்­வா­றெல்லாம் உள­றினார். மீண்டும் அவர்,  நாம்  தலை வணங்­கு­வது அல்­லாஹ்­வுக்கு மட்­டுமே என்றும் இத­னூ­டா­கவே நல்­லி­ணக்கம் உரு­வாகும் என்று கூறி­ய­வாறு  இலங்கை மக்­க­ளுக்கு ஓர் எச்­ச­ரிக்­கையும் விடுத்தார். அத்­துடன் பொது­பல சேனா மீது கடும் தொனியில் திட்­டி­ய­வாறு சவால் விடுத்தார்.

இவ்­வாறு  எந்த அமைப்போ வேறு எந்த அமைப்­புக்கோ சவால் விடுத்­தாலும்  எமக்கு  ஒன்­று­மில்லை.  ஆனால் இவ்­வாறு ஆவே­ச­மான கருத்­துக்­களால் சிங்­கள – முஸ்லிம் மக்­க­ளுக்­கி­டையே விரி­சல்கள் ஏற்­ப­டு­மானால், அதன் விளை­வு­க­ளுக்கும் சம்­பந்­தப்­பட்டோர் பொறுப்­பு­தா­ரி­யாவார். எனவே  இரு பக்­கத்­த­லை­வர்­களும் இந்த விடயம் குறித்த கவனம் எடுக்க வேண்டும். மீண்டும் ஒரு இனச் சண்டை எமக்கு வேண்டாம் என்ற தோர­ணை­யிலே இதனை முன்வைக்கிறேன். 

முஸ்லிம் அறி­ஞர்கள் கூறு­வ­தென்ன
மேற்­படி விடயம் குறித்து நாம், முஸ்லிம் கவுன்ஸில்  தலைவர், என்.எம். அமீ­னிடம்  வின­விய போது, அவர் கூறி­ய­தா­வது; 
அல்குர் ஆன் கூறும்  சட்­டத்தை எங்­களால் மாற்­றவே முடி­யாது  என்­பதை முதலில் கூறிக்­கொள்­கிறேன். ஆனாலும் அதி­லுள்ள சீதனம் மற்றும் சம்­பி­ர­தா­யங்­க­ளுக்­குட்­பட்ட விட­யங்­களை மாற்­றிக்­கொள்ள முடியும். அத்­துடன் மேற்­படி சட்டம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு  எவ்­வ­ளவு கால­மா­கி­றது? இவ்­வ­ளவு காலத்­திலும் எத்­த­கைய பிரச்­சி­னை­களும் தலை தூக்­க­வில்­லையே! அப்­ப­டி­யி­ருந்தும் ஏன் இப்­போது பிரச்­சி­னைப்­ப­டுத்த வேண்­டுமா? இதனை மாற்­று­வதில் என்ன விளையப் போகி­றது? இதனால்  இப்­போது உண்­மை­யிலே  முஸ்­லிம்கள் குழம்பிப் போயி­ருக்­கி­றார்கள்?

இவ்­வாறு  என்.எம். அமீன் கூறு­வ­தி­லி­ருந்தும் முஸ்லிம் தனியார் சட்­டத்தை மாற்ற முடி­யாது என்­பது முஸ்லிம் சமூ­கத்தின் நிலைப்­பாடு என்­பது தெளி­வா­கி­றது. 

உண்மையிலே நவீன உலகுக்கு ஈடு கொடுக்கும் வகையில் முஸ்லிம் சமூகமும்  தன்னை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும். இவ்வாறான சிந்தனை உள்ள கூட்டத்தினரும் முஸ்லிம் சமூகத்தில் இருக்கலாம். ஆனால் அவர்களது குரல் முஸ்லிம் உலகத்தில்   எடுபடுவதில்லை. இந்த விடயம் தொடர்பாக ஒரு முஸ்லிம் சகோதரியிடம் நாம் வினவிய போது அவர் கூறிய கூற்று, தமது இளமைப் பருவத்திலிருந்தே ஆண்கள் மூலம் இந்த தலைவிதிக்கு  பழக்கப்படுத்தப்படுகிறோம். அதனால் பருவமடைந்ததும் திருமணம் என்ற பேச்சுத்தான் இடம்பெறும். முஸ்லிம் உலகில் இவ்வாறான பலாத்காரமாக தமது தோள் மீது  சுமத்தப்படும்  இந்தச் சுமையிலிருந்து விடுபடுவதற்கு கல்வி அறிவாலேயே முடியும் என்று அந்தச் சகோதரி முஸ்லிம் சமூகத்திலுள்ள பெண் உரிமை பற்றிய கேலிக் கூத்தினை வெளியிட்டார். முஸ்லிம் சமூகத்தின் நிலை இப்படித்தான் இருக்கிறது. 

இந்தச் சட்டத்திலுள்ள மனித உரிமையைப் பாதிக்கும் விடயத்தை காலத்துக்கு ஏற்றவகையில் மாற்றிக் கொள்ள முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும் என்பதே எமது கருத்தாகும். இத்தகைய இனக் கோத்திரச் சட்டம் ஒன்றை மாற்றுவதற்கு  ஐரோப்பிய சம்மேளனம்  எம்மைக் கேட்கும் வரையில் நாம் இருந்துள்ளமை குறித்து வெட்கப்படவேண்டும். அதனால் இந்தச் சந்தர்ப்பத்திலாவது சட்டத்திருத்தத்தை உரிய முறையில் மேற்கொள்வதே நல்லது. அதற்காகக் காலம் தாழ்த்தவும் கூடாது. 

ராவய 13.11.2016

6 comments:

  1. All Ceylon Jammiyathul Ulamaa (ACJU) is the authorized body and representing the Muslims in Sri Lanka. Let them give the correct solution for this rather than getting the shouting by unauthorized groups. We have a strong believe that ACJU will do the best after consulting the respective Ulamaas and the intellectuals.

    ReplyDelete
  2. Appo Jaffnamuslim.com...Ravaya reporter ulariyathu sari....enru artamo...?
    oru Muslim peyar thaangi translate panni pottirukkan atha conjamaavathu oru Muslim.Com enra vahayilaavathu vaasitthuppaartuvittaavathu poda maatingala.....
    Engeeee senru kondirukkureergal...yaarukkaga ungalai vittukkondurukkureeergal....?
    Islamiya Sattattukku evvalavu savaal vitturukkaaan in tha kabothi athai condu vanthu inge pathivirakkam vera.....
    Kuppai kottum idamaaga maarugurathaa...Jaffnamuslim.com..???

    ReplyDelete
  3. In countries like pakistan, Egypt, Turkey, Morocco, and Syria , Muslim marriage law stipulates minimum age for women ranging from 16-18 years. These are Islamic countries which uphold Quranic teachings. Many components of Muslim personal law needs to reviewed. Justice Saleem Marsoof committe should be allowed to conclude what was started 7 years ago.

    ReplyDelete
  4. எழுத்தாளர் தனது கருத்து சுதந்திரத்தை பயபடுத்தியுள்ளார் அது அவரின் உரிமை,அவரிடம் இருக்கும் அவருடைய மதம் சார்ந்த நம்பிக்கை பிரகாரமும் அவருடை அவர் வாழ்வில் நடைமுறைப்படுத்தியதையும் மையமாகக் கொண்டு அவரின் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றுதான் நாம் இதைக் கருத்தில் எடுக்க வேண்டுமே தவிர அவரை கண்டிக்கவோ விமர்சனம் செய்யவோ தேவை இல்லை.இவரும் ஒரு காலத்தில் இந்தக்கருத்தை எழுதிய இதே கையாலும் பேனாவாலும் இஸ்லாமிய திருமண சட்டம் செரிதான் என்றுஎழுதி நியாயப்படுத்தவும் ஏற்படலாம்,அதுவரை இவர் போன்றோருக்கு ஹிதாயத்(நேர்வழிக்காக)பிராத்திப்போம்,

    ReplyDelete
  5. பிறப்பால் முஸ்லிமான அனேகருக்கே கொஞ்சமும் தெளிவில்லாமல் கருத்துகளைப்போணும்போது "ராவய சஞ்சீவ" என்னதான் பத்திரிகையாளனாய் இருந்தாலும் நேர்மையான மோணுவான் என்று நாம் எதிர்பார்க்கவில்லை! அவனும் 100 ஓடு 101 அவ்வளவுதான்!
    பெரும்பான்மை இனத்திற்கு ஜால்ரா அடிப்பதைக்கூட முஸ்லிமுக்கு எதிராக திருப்பி விடும் அளவிற்கு ஜேர்னலிஷம் 99.9% என்டி இஸ்லாமிஸ்ட்! என்பதை அவர்களுக்கே தெறியும்! காவியை வணங்கும் காவிச்சிந்தனைதான் அவர்களின் இரத்தமாக ஓடுகிறது!
    சரி!
    தனியார் சட்டம் எமது உரிமை! எந்த சலுகைக்காகவும் அரசோ, உதவி வழங்குனரோ அதற்கு நபந்தனையிட்டால் எமது உரிமைக்காக உயிரையும் இழக்கத்தயாராக இருக்கும் முஸ்லிம்கள் இந்தநாட்டில் இருக்கிறார்கள் என்பதை கடுமையான தொணியில் சொல்லி இருக்கிறார்கள்!அவர்களுக்கு நன்கு விளங்கி இருக்கிறது, அதை நரித்தனமாக அரசியல் லாபமாக்க இலங்கையின் புற்று நோயான இனவாத்த்தை பிரயோகிக்கிறார்கள்!
    இனவாத காவி இறைவனை கேவளமாக பேசியதை கேட்டுக்கொண்டு உண்மை முஸ்லிம்கள் ஒருபோதும் சும்மா இருக்கப்போவதில்லை எனவே அவனுக்கு அவனது பாணியில் பதிலும் சொல்லப்பட்டது! அவ்வளவுதான் ஆர்பாட்டத.தில் எந்த நிந்தனையும் இடம்பெரவில்லை!
    அசாத் பெருச்சாலியின் குடும்பம் சந்தர்பத்தை பயன்படுத்தியமையால் ராஷிக் கைது இடம்பெற்றுள்ளது! அவனைப்பற்றி உலகமே சிரிக்கிது

    ReplyDelete
  6. By if one carefully listens to Bro Razik's Sinhala speech in Maligawatte(you tube) and compare the article , The above article if translation is correct, is not accurate. It misinterprets facts show Razik in bad light. For example, bro Razik said, Muslim Marriage law may be reviewed and changed after about a year following discussions within the community and not in a hurry to please the EU. Even Ravaya has failed to live up to its usual standards.

    ReplyDelete

Powered by Blogger.