நடப்பவைகள் நல்லதற்கல்ல
இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம்கள் மீண்டும் இருள் சூழ்ந்ததொரு காலப்பகுதிக்குள் தள்ளப்படுகின்றனரா என்ற கேள்வியே சமூகம் தொடர்பில் அதிகம் கவலைப்படுபவர்கள் மத்தியில் இப்போது எழுந்திருக்கிறது.
கடந்த சில நாட்களாக நாட்டில் நடைபெற்று வரும் சம்பவங்களே இவ்வாறானதொரு துரதிஷ்டவசமான கேள்வி எழக் காரணமாகும்.
2012 ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு வெறுப்பூட்டும் பிரசாரங்களும் தாக்குதல்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்றன.
இதனை அப்போதைய அரசாங்கம் கண்டு கொள்ளாத அதே நேரம் இனவாதிகளுக்கு உறுதுணையாகவும் இருந்தது. இதன் காரணமாகவே 2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டனர்.
அன்றிலிருந்து பல மாதங்களாக முஸ்லிம்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் தமது வாழ்வைத் தொடர்ந்தனர். தாம் கஷ்டப்பட்டு கொண்டு வந்த ஆட்சி மாற்றம் தமக்கு நன்மையளிப்பதாக கருதினர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அந்த நல்ல எண்ணத்தில் மண் விழத் தொடங்கியது.
மீண்டும் இனவாதம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. கடந்த காலத்தில் வீரியமாக இனவாதம் பேசியவர்களும் மேலும் பல புதியவர்களும் களத்தில் இறங்கி முஸ்லிம்களுக்கு எதிரான தமது போராட்டத்தை மேலும் உத்வேகப்படுத்தியுள்ளனர்.
இதற்கு முஸ்லிம்கள் தரப்பில் அண்மையில் விடப்பட்ட சில தவறுகளும் காரணமாக அமைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
கடந்த சனிக்கிழமை கண்டியில் மிகத் தெளிவாகவே முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் எனக் குறிப்பிட்டு பாரிய பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது முஸ்லிம்களுக்கு எதிரான மிக மோசமான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிவாசல் வீதி பெயர்ப்பலகை இடித்துத் தள்ளப்பட்டு அதில் பௌத்த கொடி ஒன்று நடப்பட்டுள்ளது.
மேலும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்கக் கோரி துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி கண்டியில் முடிவுற்ற அதே நேரம் பொரலஸ்கமுவ, பெப்பிலியானவில் அமைந்துள்ள பெஷன் பக் தலைமையகமும் அதன் களஞ்சியசாலையும் முற்றாக தீயில் கருகியுள்ளது.
இத் தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத போதிலும் இனவாத நோக்கம் கொண்ட தாக்குதலாக இருக்கக் கூடும் என்றே பரவலாக நம்பப்படுகிறது.
தீ பரவிக் கொண்டிருந்த சமயம் பொலிஸார் பலவந்தமாக சி.சி.ரி.வி. கமெரா பதிவுகளைப் பெற்றுச் சென்றுள்ளமையும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
இதே வர்த்தக நிலையத்தை குறிவைத்து கடந்த 2013 ஆம் ஆண்டும் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் தாக்குதல் மேற்கொண்டமையும் இதன்போது தெளிவான ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்ட பிக்குகள் பின்னர் அப்போதைய ஆட்சியாளர்களின் அழுத்தங்களால் விடுவிக்கப்பட்டமையும் இலகுவில் மறந்துவிடக் கூடியவையல்ல.
இவ்வாறான பின்னணியில்தான் முஸ்லிம்கள் அர்ப்பணிப்புடன் ஆதரவளித்து ஆட்சியலமர்த்திய இந்த அரசாங்கமும் தம்மைக் கைவிடத் தொடங்கிவிட்டதா என்ற கவலை எழுந்துள்ளது.
இவ்வாறு இனவாத சம்பவங்கள் தொடர்கின்ற போதிலும் அரசாங்கம் எந்தவித உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்காது வேடிக்கை பார்ப்பது கவலைக்குரியதாகும்.
எனவேதான் அரசாங்கம் இந்த இனவாதக் கொட்டத்தை அடக்க விரைந்து செயற்பட வேண்டும். நடப்பவைகள் நல்லதற்கல்ல என்பது அரசாங்கத்திற்கு நன்கு தெரியும். இதைத்தவிர நாம் வேறொன்றும் சொல்வதற்கில்லை.
(விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்)
கண்டிப்பாக அனீதி இளைக்கப்பட்டா ல் எதிர்ப்பை வெளியிடவேசெய்வோம், போறுமை, போராட்டம் இரண்டிற்குமே இஸ்லாம் முழுமயாக வழிகாட்டியுள்ளது...
ReplyDeleteஆமாம் நடப்பவை நல்லதற்கல்ல , பேசாமல் ஒரு நாலு பிரியாணி சாப்பிட்டு விட்டு வேணுமண்டா ஒரு புர்தா கந்திரி , ஒரு பாத்திஹா ஓதி , 40 நாள் ஜமாத்லேம் போய் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம். உடஅனஏ அல்லாஹ் எங்களுக்கு எந்த கஷ்டமோ, சங்கடங்களோ தராமல் சொர்க்கம் ரெடி இப்ப நிம்மதியாக பொறுமையாக இருந்து தூங்கு எதிரிகள் என்ன செய்தாலும், திருப்பி எதுவும் செய்யவேண்டாம் பொறுமையை கடைபிடிங்க எல்லாம் அவன் பாத்துக்கொள்வான் என்றுதானே சொல்லியிருக்கிறான்?
ReplyDelete2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; “அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; “நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)
2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
2:191. இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.