விஜேதாசவின் கருத்து, இனவாதிகளுக்கு ஆதரவானது
ஐ.எஸ். அமைப்பில் 32 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும் இதற்கு பல முஸ்லிம் அமைப்புகள் உதவுவதாகவும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு முஸ்லிம் கவுன்சில் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
கூறிய கருத்துக்கே குறித்த அமைப்பு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது நீதியமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் முஸ்லிம் மக்களை தவறாக வழிநடத்தக்கூடும்.
மேலும் ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஆகியன இணைந்து புலனாய்வுப் பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இது போன்ற கருத்துக்களில் எவ்விதமான உண்மையும் இல்லை. அத்தோடு இவ்வாறான கருத்துக்கள் இனவாதிகளுக்கு நிச்சயம் ஆதரவு வழங்குவதாக அமையும்.
கடந்த ஆண்டு ஐ.எஸ் அமைப்பில் இணைந்து உயிரிழந்த இலங்கையர் தொடர்பில் செய்திகள் வெளியாகியிருந்தது.
அதன்பின்னர் ஐ.எஸ் உடன் தொர்புடைய இலங்கையர் குறித்த எவ்வித உறுதியான தகவல்களும் இல்லை.
ஆகவே இது தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்றை நடத்த அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜேதாஸவே ஒரு இனவாதிதான். அவர் முஸ்லிம்களின் அடிப்படை உரிமையை கேள்விக்குள்ளாக்கி உள்ளார். கொச்சை படுத்தி உள்ளார். முஸ்லிம்களின் அமைப்புக்களுக்கு பிழையான வியாக்கியானம் கொடுத்துள்ளார். இவரை வன்மையாக அனைவரும் கண்டிக்க வேண்டும்.
ReplyDeleteippdiye solli solli irunga....BBS kaarenukkum kumpidu podunga...!
ReplyDeletevelangidum...