மகிந்த - இராவண பலயவும் இணைந்து, நாட்டில் பதற்ற நிலை ஏற்படுத்த முயன்றனர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் இராவண பலய அமைப்பும் இணைந்தே அங்கவீனமடைந்த இராணுவத்தினர் மூலமாக நாட்டில் பதற்ற நிலை ஏற்படுத்தப்பட்டது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஆதாரபூர்வமாக கூறினார்.
இன்று கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
சம்பவ தினம் அன்று தமது கோரிக்கைகளை பெற்றுகொள்ளும் வகையில் அங்கவீனமடைந்த குழு ஜனாதிபதி செயலகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு சென்றார்கள். அங்கு அவர்களுக்கு நியாயமான பதிலும் கொடுக்கப்பட்டது.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு விட்டது அதனை கடிதம் மூலமாக பெற்றுகொண்டு வருகின்றோம் என வெளியில் இருந்த இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரருக்கு தொலைபேசி மூலமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளார்கள்.
அதன் பின்னர் அந்த விடயம் முற்றாக மறைக்கப்பட்டு பிக்குகள் குழப்பும் நோக்கத்தோடு வெளிநபர்களையும் இணைத்துக் கொண்டு அத்துமீறி ஜனாதிபதி செயலகத்திற்கு பிரவேசிக்க முயன்றுள்ளனர் அதனாலேயே அவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
எனவே இது திட்டமிட்டு நாட்டையும் ஆட்சியையும் குழப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட செயல் இதற்கு என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன என அவர் குறிப்பிட்டார்.
மேலும் இதன் பின்னிலையில் மகிந்தவும், சத்தாதிஸ்ஸ தேரருமே இருக்கின்றனர். தேரர் உண்மையாக நடந்து கொண்டிருந்தால் அங்கவீனமடைந்த இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்காது.
தேரர் அரசியல் இலாபத்திற்காக நாட்டை குழப்ப திட்டமிடுகின்றார் எனவும் ருவன் விஜேவர்தன குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
Post a Comment