திட்டமிட்டவாறு இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு - தனியார் பஸ் உரிமையாளர்கள்
திட்டமிட்டவாறு இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று -14- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
வாகனப் போக்குவரத்தின் போது தவறிழைக்கும் சாரதிகளுக்கான தண்டம் 2500 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக வரவுசெலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தீர்மானித்தர்.
எவ்வாறாயினும் குறித்த தண்டப்பணம் அறவிடுவது தொடர்பில் எவ்வித மாறுபாடுகளும் இடம்பெறாது என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தவறுழைகு சாரதிகளுக்குத்தான் தண்டனையை அரசு அறிவித்துள்ளது தவறிழைக்காமல் இருப்பதற்கும் பொது மக்களை பாதுகாப்பதற்குமான வழியே இது இதற்கல்லாம் ஆர்ப்பாட்டமு வேலை நிறுத்தமும் தண்டிவேண்டியதிருக்கும்,மற்றை நாடுகளுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் இலங்கையில் இது மிகவும் குறைவானது ,மதுபோதையிலும்.போன் பேசிக்கொண்டும்,அளவளாவி பேசிக்கொண்டும்.முந்திச்செல்லும் விதங்களில் எல்லாம் நடை பெறும் விபத்துக்களே அதிகம்.இதையல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
ReplyDeleteBus odama niruththie irundal ade idaththil PETROL UTRI NERUPPU WAIKKAWUM.
ReplyDelete