அவுஸ்திரேலியர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ள இலங்கையர்
கல்வியில் சாதிக்க நோய் ஒரு தடையில்லை என நிரூபித்த இலங்கையர் குறித்து, அவுஸ்திரேலிய ஊடகங்களில் செய்திகள் வௌியாகியுள்ளன.
தினேஷ் பலிபனய எனும் குறித்த இளைஞர், 2010ம் ஆண்டு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றில் வைத்தியப் படிப்பை மேற்கொண்டு வந்தபோது, திடீர் விபத்தொன்றுக்கு முகம்கொடுத்தார்.
பிலிஸ்பேனில் வசிக்கும் தனது பெற்றோரை சந்திக்க காரில் சென்றவேளையே அவர் இவ்வாறு விபத்துக்குள்ளானார்.
இதனையடுத்து கை, கால்கள் செயலற்ற நிலையில் paralysed தாக்கத்திற்கு உள்ளான அவரின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டது.
எனினும் இந்த சவாலை சாமர்த்தியமாக எதிர்கொண்ட அவர், கடந்த வருடம் மீண்டும் அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் தனது கல்வியைத் தொடர ஆரம்பித்தார்.
இதற்கமைய இன்னும் சில மாதங்களில் அவர் தனது வைத்தியப் பட்டப்படிப்பை நிறைவு செய்து, அந்த நாட்டில் paralysed தாக்கத்திற்கு உள்ளான நிலையில் வைத்தியப் பட்டம் பெற்ற இரண்டாவது நபர் என்ற பெருமையையும் தனதாக்கியுள்ளார்.
தினேஷ் பலிபனயவுக்கு தற்போது 32 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
Ivar kalvithurail yellorukkum munmathri
ReplyDelete