Header Ads



தெற்கு ஆசியாவில் நடந்த, மிகப்பெரிய  கொள்ளை

தெற்கு ஆசியாவிலேயே நடைபெற்ற அதி கூடிய கொள்ளைகளில் ஒன்றே தற்போது இலங்கையில் நடைபெற்றுள்ளது. திருடர்களை காப்பாற்றும் ஆட்சியே தற்போதைய ஆட்சி என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்சா குற்றம் சுமத்தினார்.
கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதியும் பிரதமரும் சுத்தமானவர்களாக நாட்டை ஆட்சி செய்பவர்களாக இருந்தால் மிகக்குறுகிய காலத்தில் மத்திய வங்கியில் இத்தகைய பாரியளவு மோசடி இடம் பெற்றது எவ்வாறு எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் தற்போது முறைகேடான ஆட்சியே நடைபெற்று வருகின்றது இப்போது நடைபெற்றுள்ள ஊழலும் 2 வருடங்கள் வரை இழுபறி செய்து விட்டு மூடிமறைத்து விடுவார்கள்.
இதேவேளை வற்வரியில் நாட்டு மக்களுக்கு அதிகளவு பாதிப்பு இருக்கும் என்பது தொடர்பில் நாம் கூறியவற்றினை பொருட்படுத்தாமல் பாராளுமன்றத்தில் அது நிறைவேற்றப்பட்டது.
கடந்த கால ஆட்சியில் பெற்ற கடனை அடைப்பதற்காகவே வரிகள் அமுல்படுத்தப்படுவதாக கூறப்பட்டது ஆனாலும் அது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்பது சந்தேகமே.
எவ்வாறாயினும் தற்போதைய ஆட்சியில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் எனவும் ரஞ்ஜித் சொய்சா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.