Header Ads



அமெரிக்க நாய்களுக்கு மாத்திரம், வரியை குறைத்த மஹிந்த அரசு - போட்டுத்தாக்கும் கபீர்

இலங்கையில் இருந்த அமெரிக்காவின் நாய்களுக்கு வழங்கப்படும் உணவுகளுக்குமாத்திரம் வரியைக் குறைத்து விட்டு ஏனையவை அனைத்துக்கும் நினைத்துப் பார்க்கமுடியாதவாறு வரி விதித்த முன்னைய மஹிந்த அரசு எமது வரவு - செலவுத் திட்டத்தைவிமர்சிப்பதற்கு எந்தவகையிலும் அருகதை அற்றதாகும். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் காஸீம் தெரிவித்தார்.
வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துக் கூறிய அவர், இது தொடர்பில் மேலும்தெரிவித்தவை வருமாறு,

நாம் சமர்ப்பித்துள்ள 2017ம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் மக்கள் நேயவரவு - செலவுத் திட்டமாகும். இதை விமர்சிப்பவர்கள் எல்லோரும் 10 வருடங்களாகஆட்சியில் இருந்தவர்கள்.

20 வருடங்கள் ஆட்சியில் இருந்தவர்களும் உள்ளனர்.இன்று ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சினையானது மைத்திரி - ரணில் ஆட்சியில்ஏற்பட்டது அல்ல. இது கடந்த 10 வருடங்களுக்குள் உருவான பிரச்சினையாகும்.

அந்தப்பிரச்சினை ஏற்பட்டபோது அப்போது கொண்டு வரப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தைஇவர்கள் இதேபோல் எதிர்க்கவில்லை.மஹிந்தவின் ஆட்சியில் சீரழிக்கப்பட்ட பொருளாதாரத்தை நாங்கள் கையேற்றுசீர்படுத்தி வருகின்றோம்.

கையேற்று ஒன்றரை வருடங்களுக்குள் அரச ஊழியர்களுக்கு10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு, தனியார் துறைக்கு இரண்டாயிரம் ரூபா சம்பளம்அதிகரிப்பு, சமுர்த்தி 200 வீதத்தால் அதிகரிப்பு உள்ளிட்ட பல சேவைகளைச்செய்துள்ளோம்.

எமது இந்த வரவு - செலவுத் திட்டத்தில் வரி அரிகரிப்பு இடம்பெற்றிருப்பதாகஇவர்கள் குற்றஞ்சாட்டுகின்றார்கள். வரி அதிகம் அறவிடப்பட்டது மஹிந்தவின்ஆட்சியில்தான் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

2014ஆம் ஆண்டு அறவிடப்பட்ட வரி ஒரு இலட்சத்து 5000 கோடி ரூபாவாகும். அதில் 25ஆயிரத்து 100 ரூபா வற் வரியால் திரட்டப்பட்ட நிதியாகும். ஆனால், 2017இல் நாம்எதிர்பார்க்கும் வரி ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 100 கோடி ரூபாவாகும்.

அதில்வற் வரி 38,000 கோடி ரூபாவாகும். ஆகவே, 2014ஆம் ஆண்டு 26 வீத வரிபெறப்பட்டுள்ளது. ஆனால், நாம் எதிர்பார்ப்பது 20 வீத வரியையாகும்.
2014ல் ஒரு கிலோ மாசிக்கு 302 ரூபா, நெத்தலி கருவாடு ஒரு கிலோவுக்கு 26ரூபா,கருவாடு ஒரு கிலோவுக்கு 102 ரூபா, வெள்ளைப் பூண்டு ஒரு கிலோவுக்கு 40ரூபா, பருப்பு ஒரு கிலோவுக்கு 22 ரூபா, டின்மீன் ஒன்றுக்கு 102 ரூபா, சீனி ஒருகிலோவுக்கு 30 ரூபா எனக் கண்மூடித்தனமாக வரியை அதிகரித்தனர்.

ஆனால், நாய்களின் உணவுக்கு மாத்திரம் வரியைக் குறைத்தனர்.

அமெரிக்காவின்நாய்கள் இங்கு அதிகம் காணப்பட்டதால் அவற்றுக்கு வெளிநாட்டு உணவுகள் வழங்கவேண்டும் என்பதற்காகவே அவற்றுக்கான வரிகள் குறைக்கப்பட்டன.

இப்படிப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தைக் கொண்டு வந்த மஹிந்த அணியினருக்குஇந்த வரவு - செலவுத் திட்டத்தை விமர்சிக்கும் உரிமை கிடையாது என்றார்.

1 comment:

Powered by Blogger.