பௌத்த விகாரைகளை, மூடும் யுகம் உருவாகியுள்ளது - மஹிந்த
வடக்கு கிழக்கில் தற்போது விகாரைகள் அனைத்தும் மூடப்படும் நிலைமை காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அழுத்கம, காலவில பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
பௌத்த விகாரைகளை பனை கிளைகளைக் கொண்டு மூடும் யுகம் இன்று மீண்டும் உருவாகி வருவதாக மஹிந்த ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று பல இடங்களிலும் விகாரைகள் மூடப்பட்டு வருகின்றது. நாங்கள் நினைக்காத போதிலும், வடக்கு கிழக்கில் இணைத்து வைத்திருந்த பௌத்த படங்கள், கல்வெட்டுகள் போன்றவை இன்று பனை கிளைகளைக் கொண்டு மூடும் யுகம் மீண்டும் உருவாகி வருகின்றது.
மிகவும் அவதானம் செலுத்தப்பட வேண்டிய பிரச்சினையாகவே இதை நான் கருதுகின்றேன்.
எங்களுக்கு நல்லிணக்கம் என்பது அவசியம். எனினும் அது ஒரு பக்கத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படக் கூடாது. வடக்கு கிழக்கினை எடுத்துக் கொண்டால் அங்கு சிங்களவர்கள் சிறுபான்மையினராகவே உள்ளனர்.
அந்த சிறுபான்மையினரை பாதுகாப்பதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. வடக்கு கிழக்கில் பௌத்த மக்கள் மற்றும் பௌத்த விகாரைகளை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதுக்காகத்தான் பௌத்தர்களின் வாசம்கூட இல்லாத இடங்களிலும் சிலைகளைவைத்து குளப்புகிறீர்களோ?
ReplyDeleteஇந்த பரட்ட காபிருக்கு துவேசம் தவிர வேறு ஒன்றும் விளங்காது. யாஅல்லாஹ், இந்த நாட்டு முஸ்லிம்களையும் உலக முஸ்லிம்களையும்இந்த காபிரின் சூழ்ச்சி அநியாயங்களில் இருந்து காப்பாற்றுவானாக.
ReplyDeleteEppadi pesum inda nayin pinnal panaththukkaha sutrum ASWER SATHTHAR MUBARAK MAULAVI pondrawargalukku innum wekkam rosam manam waravillaya.
ReplyDelete@ Dear mahinda
ReplyDeleteதோல்வியில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால், அது தான் உண்மையான தோல்வி....