நிதி போதாது, ஹலீம் அதிருப்தி
வரவு செலவுத் திடடம் குறித்து தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹலீம் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தபால் துறைக்கு போதியளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
போதியளவு நிதி ஒதுக்கப்படாமை குறித்து ஆளும் கட்சி அமைச்சர் என்ற ரீதியில் கவலையடைகின்றேன்.
தபால் திணைக்களம் நட்டத்தில் இயங்கி வருகின்றது. தபால் திணைக்களத்தில் லாபமீட்ட வேண்டுமாயின் தற்காலத்திற்கு பொருத்தமானதாக தபால் திணைக்களத்தை மாற்றியமைக்க வேண்டும்.
தற்போதைய உலகிற்கு பொருத்தமான வகையில் தபால் திணைக்களத்தை நவீனமயப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதான தபால் நிலையங்கள் ஒன்றுக்கு ஒன்று இணைக்கப்பட்டுள்ள போதிலும் உப தபால் நிலையங்கள் இணைக்கப்படவில்லை.
இதனால் எதிர்பார்த்த பலனைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து பிரதமருக்கு தெளிவூட்டப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
மேலும், வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதும் இது குறித்து விவாதிக்கப்படும் என அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment