உலக சர்க்கரை நோய் தினம்
உலக சர்க்கரை நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. உலக சுகாதார நிறுவன அறிக்கையின் படி உலகளவில் 350 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயுடன் வாழ்ந்து வருகின்றனர். 1.5 மில்லியன் இறப்புகள் சர்க்கரை நோயின் மூலம் ஏற்படுகிறது. சர்க்கரை நோய் தடுப்பு முறைகளை ஊக்குவித்து, சர்க்கரை நோயிக்கான சிகிச்சை முறைகளை வலுப்படுத்தி சர்க்கரை நோய் வராமல் தீவிர கண்காணித்தலின் மூலம் சர்க்கரை நோயை தடுப்பதாகும்.
ரத்தத்தில் ஒருவருக்கு வெறும் வயிற்றில் சர்க்கரையின் அளவு 100 மில்லி கிராம் டெசிலிட்டர் சாப்பிட்ட பின் ரத்தத்தில் ஒருவருக்கு சர்க்கரையின் அளவு 140 மில்லி கிராம் டெசிலிட்டர் என்ற அளவுக்குள் இருக்க வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது இதயம், ரத்த நாளங்கள், கண்கள், நரம்புகள், சிறுநீரகங்கள் மற்றும் பாதங்கள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 2010 ஆண்டில் உலக அளவில் 6.4 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 2030 ஆண்டிற்குள் 439 மில்லியனாக உயர்ந்து 7.7 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் வரவாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை நோய் வகை ஒன்று, வகை இரண்டு என்று இரண்டு வகைப்படும். சர்க்கரை நோயின் சிகிச்சை முறைகளுக்கான செலவீனங்களால் குடும்பத்திலும் சுகாதார திட்டத்திலும் தேசிய பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தற்போது இந்தியாவில் 7.8 சதவீதம் பேர் சர்க்ரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சர்க்கரை நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம் மாரடைப்பு, கண் நரம்பு பாதிப்படைவதை தடுக்கலாம். சர்க்கரை நோய்க்கு இன்சுலின் மருத்தை 1921 ஆம் ஆண்டு கண்டுபிடித்த பிரட்ரிக் பேண்டிங் பிறந்த நாளை உலக சர்க்கரை நோய் தினமாக கடைபிடிக்கிறோம்.
10 பேரில் ஒருவருக்கு இன்று சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியமான உணவு மற்றும் உணவு பழக்கம், முக்கியமாக காலை உணவை தவறாமல் சாப்பிடுவதே சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்க சிறந்த வழியாகும். நார்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், பழங்கள், பயிறுகள் சர்க்கரையை கட்டுப்படுத்தும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் 45 நிமிட நடைபயிற்சி அவசியமாக மேற்கொள்ள வேண்டும். சர்க்கரை மீது அதிக அக்கரை கொண்டு விழிப்புணர்வு பெற்று வாழ வேண்டும்.
Post a Comment