Header Ads



பொதுபல சேனாவின் அச்சுறுத்தல் - பாகிஸ்தான் தேசிய கொடி நீக்கப்பட்டது

பொதுபல சேனாவின் அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் தேசிய கொடி இன்று பொலிஸாரினால் நீக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் பத்தரமுல்ல வோட்ஸ் எட்ஜில் இன்று -27-cfu மாலை உணவு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உணவு கண்காட்சிக்காக அதனை சுற்றியுள்ள பிரதேசங்களில் காணப்பட்ட பாகிஸ்தான் தேசிய கொடிகள் வெலிக்கடை பொலிஸாரினால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பாகிஸ்தான் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் செயற்பாட்டாளரான அம்புகல்லே ஜனானந்த என்ற தேரரினால் பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இவ்வாறு கொடிகளை நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய கொடியின்றி, பாகிஸ்தான் கொடிகளை பறக்கவிட முடியாதெனவும், அவ்வாறு நீக்கவில்லை என்றால் தான் அணிவகுப்பாக வந்து பாகிஸ்தான் கொடிகளை நீக்குவதாக அவர் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

எப்படியிருப்பினும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகர் இது தொடர்பில் இலங்கை அரசியல் பிரதானிகள் சிலருக்கு தனது அதிருப்திகளை வெளிப்படுத்தியுள்ளார்.

8 comments:

  1. That is good to pay back Sinhalese gratitude for helping to finish LTTE.this is BBS diplomacy..

    ReplyDelete
  2. பாகிஸ்தானிலிருந்துதான் உமக்கு எதிரி கூடியசீக்ரம் எதிர்பார்திரு.

    ReplyDelete
  3. என்ன நடக்குது ஏது நடக்குது யார்க்குத்தான் தெரியும்?????

    ReplyDelete
  4. They should have included Srilankan flag as the program is run inside Srilanka (our land)

    ReplyDelete
  5. என்ன நடக்குது ஏது நடக்குது யார்க்குத்தான் தெரியும்????

    ReplyDelete
  6. Why should the police take orders from BBS ? Why is the
    Govt speechless of BBS antics ? Why allow the BBS to
    blackmail the police or the Govt ? Why allow BBS to
    go on living correcting other people with mainly the
    help of police ? Is the BBS defence secretary ?
    If something is wrong about the way Pakistan flags
    were flying , the govt must have looked into it
    and asked the embassy for explanation or removal
    and instead why allow a racist waiting to take on
    "anything Muslim" to react with grudge in mind ?
    THE GOVT MUST SOON BRING THIS MENACE UNDER CONTROL.

    ReplyDelete
  7. Theras have started to threaten the police......This is not good. But we Muslims must be patient and not react blindly.
    ..."verily, Allah is with those who are patient"

    ReplyDelete
  8. One thing everybody is forgetting to talk about is the 'Muslim Problem'.

    Why Pakistan, a Muslim country, had to involve/help Sri Lanka in killing hundreds of thousands of lives- what the civil war in Sri Lanka had to do with a Muslim country, Pakistan? Pakistan helped Sri Lanka seeking the pleasure of Allah or seeking the displeasure of India?

    Can we say "This is the Muslim problem! Muslims are not being Muslims!!"?

    ReplyDelete

Powered by Blogger.