Header Ads



'இனவாத - மதவாதத்தை பரப்பி நாட்டை தீவைத்துக் கொளுத்தக்கூடாது'

புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை. சிலர் பொய்யான பயத்தை நாட்டில் ஏற்படுத்தி இனவாத, மதவாத, அரசியல் நடத்த முனைகின்­ற­னர்.

இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சபை முதல்வரும் நெடுஞ்சாலைகள், உயர்கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அடிப்படைவாதத்திலிருந்து விடுபட்டு நடுநிலையாக தமிழ்த் தரப்பினர் புதிய அரசியலமைப்பு தொடர்பில் இணைந்துள்ளமை வரவேற்புக்குரியதாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவிப்பதாவது,

புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை. ஒற்றையாட்சிக்கே முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

1987 ல் மாகாண சபைகள் ஏற்படுத்தப்பட்டபோதும் நாடு பிரியும், வடக்கு கிழக்கு இந்தியாவின் மாநிலங்களாக மாறும், இங்குள்ளவர்கள் வடக்கு கிழக்கு செல்ல வீசா எடுக்க நேரிடும் என அச்சுறுத்தினார்கள்.

ஆனால் மாகாணசபைகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் எதுவுமே இன்றுவரை நடக்கவில்லை.

அத்தோடு ஐ.தே.கட்சி , ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஜே.வி.பி. மற்றும் பொது எதிர்க்கட்சியென அனைவரது கருத்துக்களும் பெறப்பட்டே அரசியலமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.

எனவே பொய்யான அச்சம் தேவையில்லை . இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்பி நாட்டில் தீவைத்துக் கொளுத்தக்கூடாது. இதில் அர­சியல் குளிர் காயக்­கூ­டா­து.

No comments

Powered by Blogger.