Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள், நிறுத்தப்பட வேண்டும் - டிரம்ப்


அமெரிக்க அதிபராக வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள், ஹிஸ்பானிக், கருப்பின மக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக சமீப காலமாக சகிப்புத்தன்மையின்மையும், வெறுப்புணர்வும், துன்புறுத்தல்களும் பெருகிவருவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் கூறியதாவது:-

இதை கேள்விப்படும்போது மிகவும் கவலையாக உள்ளது. இத்தகைய செயல்பாடுகளை நிறுத்துங்கள் என நான் சொல்வது உதவிகரமாக இருக்குமானால், உங்கள் கேமராவுக்கு முன்பாகவே ‘இதை நிறுத்துங்கள்’ என தெரிவித்து கொள்கிறேன்.

இப்படி எல்லாம் செய்யாதீர்கள், இத்தகைய செயல்கள் கொடூரமானது. நான் இந்த நாட்டை ஒன்றிணைக்கப் போகிறேன். என்னைப்பற்றி சரியாக தெரியாத சில பிரிவினர் என்னைக் கண்டு அச்சப்படுகின்றனர். அதனால் எனக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் தேர்தலை சந்தித்துள்ள நமக்கு சிலகாலம் தேவைப்படும் என்பது போராட்டக்காரர்களுக்கும் தெரியும். எனினும், தொழில்ரீதியான போராட்டக்காரர்கள் தங்களது வேலையை செய்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் ஹிலாரி வெற்றிபெற்று எங்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால் அதை பலர் விமர்சித்திருப்பார்கள். அதை வேறு மாதிரி சித்தரித்து விமர்சித்திருப்பார்கள். அப்படிப்பட்ட இரட்டை நிலைப்பாடு நமது நாட்டில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

3 comments:

  1. Well said Mr.president elect,
    people have misunderstood what you mentioned during the election camphain. As the responsible president of USA you are expected to be president for all Americans irrespective of race color or religious group. you are responsible for their rights, freedom and peaceful co exisitance. Show the world that Trump is not what they think

    ReplyDelete
  2. இதெல்லாம் அரசியல் பேச்சு, இதையும் நம்பும் ஒரு கூட்டம் நம்மத்தியில் இருக்கத்தான் செய்கின்றது.
    அவர் Jerusalem and Palestine பற்றி பேசிய கானொளியை பார்க்கவும்.
    Modi , My3 இவர்களும் இப்படித்தான் சிறுபான்மையினரை காப்பற்றுவாதகதான் கூறினார்கள். ஆனால் சிறுபான்மை குறிப்பாக முஸ்லிம்களுக்கு இவர்களின் ஆட்சியின் என்ன நடக்கிறது என்பது தெரியும்தானே.
    இதில் இன்னொரு விடயம் இந்த மூவரின் மற்றும் David Cameroon வெற்றிக்குப்பின்னால் இவர்களின் தேர்தல் விடயங்களுக்கு ஒத்துளைத்தது ஒரே நிறுவனம்.

    ReplyDelete

Powered by Blogger.