இலங்கையில் வெள்ளையாக மாறப்போகும் வீதிக் கடவைகள்..!
இலங்கையில், மஞ்சள் நிறத்தில் குறித்துக் காட்டப்பட்டுள்ள வீதிக் கடவைகளின் நிறத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. இந்நிலையில், வௌ்ளை நிறத்தில் குறித்துக்காட்டு வீதிக் கடவைகளை அறிமுகப்படுத்தும் பணிகளில், அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம், கொழும்பில் ஆரம்பிக்கப்படும் இந்த புதிய வேலைத்திட்டம், எதிர்வரும் காலங்களில், ஏனைய மாகாணங்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று, அச்சபை தெரிவித்தது. பனிபொழிவைக்கொண்ட நாடுகளிலேயே வீதிகளை கடக்க மஞ்சள் கடவைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஏனைய நாடுகளில், வெள்ளைக் கடவைகளாகவே அவை பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், இலங்கையிலும் இந்த மாற்றம் ஏற்படுத்தப்படுவதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்தார்.
இதில் மத்திரம் மற்ற நாடுகளை பின்பற்றுகிறீர்களா? இலங்கை காலநிலைக்கு வெள்ளை பொறுந்தாது.
ReplyDeleteஎமது நாட்டு மக்களின் உள்ளங்களையும் வெள்ளையாக மாற்ற முடிந்தால் ...... !
ReplyDeleteநீங்களாகவே ஒன்றைக் கொண்டுவருவீர்கள். அதற்கு முன்பு இருந்ததை குறைகூறுவீர்கள். பின்பு மீண்டும் பழையதுதான் சரியென்பீர்கள். இப்படியே போகின்றது நமது நாட்டின் வரிப்பணம் வீணாக!
ReplyDeleteWasting Money.. There is nothing wrong with YELLOW lines. There are many countries using yellow line.
ReplyDeleteஏனைய நாடுகள் அபிவிருத்தி அடைந்து விட்டது. இலங்கை அடைந்து விட்டதா??? இலேசானதை மட்டும் செய்யும் அரசாங்கம்.
ReplyDeleteதேவையற்ற வேலை. வீதி ஒழுங்க சம்மந்தமாக எவ்வளவோ விடயம் இருக்கும் போது. இது தேவையற்ற வீண் செலவு. மக்கள் பணம் அநியாயமாக செலவழிக்கப்படுகிறது
ReplyDeleteபுதிதாக இடப்படும் கோடுகளும், அழிந்துபோன கோடுகளை புதுப்பிக்கும்போதும் மாற்றம் செய்யலாமே! மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதில் இவர்களை விட்டால் யாரும் இல்லை. சிதைவடைந்த வீதிகளை புதிதாகப் போடவோ, செப்பனிடவோ மாட்டார்கள். நன்றாக உள்ள வீதிகளை தோண்டி, மறுபடியும் போடுவார்கள்.
ReplyDelete