இஸ்ரேலே, வலிக்கிறதா..?
செய்மதியை அனுப்பினாய், உலகத்தை திருப்பினாய், ஊடகங்களை அடக்கினாய். சிந்தனையை ஒழப்பினாய், செயல்களை குறிக்கினாய், அறிவை மொடக்கினாய் கொள்கையை குழப்பினாய், ஒற்றுமையை நொருக்கினாய், பிரிவினை எழுப்பினாய், இதயத்தில் நெருப்பை மூட்டினாய், இரத்தத்தில் எண்ணையை ஊற்றினாய். அணலில் அங்கே அமைதியாய் குளிர்காய்ந்திருந்தாயே
இப்போது ஏன் குளிரை விரும்புகிறாய்
ஏன் தீயை அடித்து விரட்ட துடிக்கிறாய் நீ வரலாற்றுக்காலத்திலும் இதிகாசங்களிலும் புறாணங்களிலும் விரட்டப்பட்டது மறந்துவிட்டதா?
என்ன ஆயிற்று ஆமோஸ் 9 இற்கு செயலிழந்துவிட்டதா ? அல்லது செய்வினை எதிர்வினையாய்
செயல்பட தொடங்கிவிட்டதா?
அறிவாளிகள் என்று தங்களை அடையாளப்படுத்தும் நீங்கள் நியுட்டனின் 3 ஆம் விதியை அறியாமலுமா அறிக்கைவிடுவீர்கள் !
எல்லாத்தாக்கத்துற்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு என்ற பாலர் வகுப்பு பாடம் கூட தெரியவில்லையா உங்களுக்கு
ஓட்டப்பட்ட உயிர்களுக்கு சமனான உயிர்கள் ஓட்டப்படும் நீங்கள் கொடுத்த சதிகளுக்கும் சக்திகளுக்கும் சமனான சக்தி உங்களிடம் திருப்பி வழங்கப்படும்.
முடிந்தால் '3ம் விதியையும் உங்கள் யூத தலை விதியையும் மாற்றிவிடுங்கள்'
அல்லது
தெழில்நுட்ப கோளாறு என்று
குடத்துக்குள் கூவிக்கொண்டு குடத்துடன் தண்ணீருக்கு அலையுங்கள்.
அணைந்ததும் அனைத்தையும் பயங்கரவாதிகள் மேல் போட்டுவிடலாம்.
பாவம் உங்களிடம் ஏது தண்ணீர் எண்ணெய் பீப்பாக்கள் தானே இருப்பில் இருக்கிறது
உங்கள் கதறல்கள் காதை துளைக்கிறது
மனிதநேயம் கற்பிக்க கால்கள் அழைக்கிறது. உங்கள் கண்ணீருக்கு சமனான தண்ணீர் தர கைகள் துடிக்கிறது. உங்கள் கண்ணீர் வற்றிவிடாமல் வழிந்தோடிக் கொண்டிருக்க .....
-Hasni Hamed Civil Engineering student
University Of moratuwa-
Very nice
ReplyDeleteExcellent wordings.
ReplyDeleteReasonable thoughts.
ReplyDelete