Header Ads



சிங்களவர்களின் பொறுமை, கோழைத்தனமாக கருதப்படுகின்றதோ..?

சிங்கள சமூகத்தின் பொறுமை கோழைத்தனமாக கருதப்படக்கூடாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்னசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சியன் தலைமையக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

சிங்கள சமூகத்திற்கு நல்லிணக்கத்தைக் கற்றுக்கொடுப்பதற்காக கருத்தரங்குகள், செயலமர்வுளை நடத்த வெளிநாடுகள் நிதி உதவிகளை வழங்கியுள்ளன.

இவ்வாறான விடயங்களை பார்க்கும் போது சிங்களவர்களின் பொறுமை கோழைத்தனமாக கருதப்படுகின்றதோ என எண்ணத் தோன்றுகின்றது. நல்லிணக்கம் பற்றி சொல்லிக் கொடுக்கும் அளவிற்கு சிங்கள சமூகத்தில் பிரச்சினைகள் கிடையாது.

நல்லிணக்கம் பற்றி தெற்கு சமூகத்திற்கு மட்டும் அறிவுரைகள், ஆலோசனைகள் விரிவுரைகள் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும்.

வடக்கின் தமிழ் சமூகத்தில் சில அரசியல்வாதிகளும் மீளவும் புலிகளுக்கு உயிர்ப்பூட்ட வேண்டும் என நினைக்கும் சிலரும் கடுமையான முயற்சி மேற்கொள்கின்றனர். இந்த முயற்சியை பெரும்பான்மையான தமிழ் சமூகத்தினை அடிமையாக்கிக்கொள்ளக் கூடும்.

திட்டமிட்டு செயற்பட்டு வரும் இந்த தரப்பு வடக்கின் ஒட்டுமொத்த சமூகத்தையும் தமது ஆணைக்கு கட்டுப்படுத்தக் கூடும். எனவே இந்த நிலையை புரிந்து கொண்டு செயற்பட வேண்டுமென நிசாந்த சிறி வர்னசிங்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. JHU is an extremist Sinhalese party. They are steering the BBS, RB and other with the political influence

    ReplyDelete

Powered by Blogger.