தயா கமகேயை நீக்குக - ஹரீஸ் போர்க்கொடி
அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் நேச சக்தியாகவும், இனவாதமற்ற அரசியல் தலைமையாகவும் தன்னைக் காட்டிக் கொண்ட அமைச்சர் தயா கமகே மாணிக்கமடு புத்தர் சிலை நிறுவப்பட்ட விவகாரத்துடன் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார்
எனவே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்த தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வலியுறுத்தினார். கல்முனையிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் அத்துமீறி புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளமை தொடர்பிலும், இதன் பின்னணியில் இருந்ததாக கூறப்படும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான தயாகமகே இந்த விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்து குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பிரதி அமைச்சர் சட்டத்தரணி ஹரீஸ் மேலும் கருத்து வெளியிடுகையில்,
இன்றைய நல்லாட்சி அரசு மத, கலாசார உரிமைகள் மற்றும் பாரம்பரிய பிரதேசங்களை மதித்து இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் பாதையில் பயணித்து வருகின்றது.
எனினும் பௌத்த மக்களே வாழாத அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாணிக்க மடு தமிழ் கிராம மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை நிறுவப்பட்ட விவகாரம் சமூகங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தி அரசின் நன்னோக்கை சிதறடிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அதிலும் நல்லாட்சி அரசின் அமைச்சர் ஒருவரே இச்சிலை நிறுவுதல் விவகாரத்தை கையிலெடுத்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் தருவதாக அமைந்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் இன சௌஜன்யத்துடன் வாழ்ந்துவரும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே பாரிய பிளவையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தும் இத்தகைய செயலில் அவர் இறங்கியிருப்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.
தயாகமகே கடந்த பொதுத் தேர்தலின்போது தன்னை இனவாதமற்ற, சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் நேச சக்தியாகக் காட்டிக்கொண்டு வாக்கு வேட்டைக்காக ஆலாவாய்ப்பறந்து திரிந்தவர்.
இவர் மீது நம்பிக்கை கொண்ட முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட சிறுபான்மை மக்கள் வாக்களித்திருந்தனர். மூவின மக்களிடையேயும் ஓர் உறவுப் பாலமாகவே அமைச்சர் தயாகமகேவை அம்பாறை மாவட்ட மக்கள் கருதினர்.
இவ்வாறு நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இன்று பேரதிர்ச்சியும், அச்சமும் ஏற்பட்டு கொண்டிருந்த நம்பிக்கை தவிடு பொடியாகியுள்ளது.
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அம்பாறை கச்சேரி கேட்போர் கூடத்தில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றபோது ஓருங்கிணைப்புக் குழுவின் தலைவரான அமைச்சர் தயாகமகே, “இந்த நாட்டில் புத்தர் சிலைகள் வைப்பதை எவராலும் தடுக்க முடியாது. புத்தர் சிலை வைப்பது நல்லாட்சியைப் பாதிக்குமென்று எவராவது கருதினால், எனது அமைச்சுப் பதவியைக் கூடத் துறக்க நான் தயாராகவுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
தீகவாபி விகாரைக்குச் சொந்தமான காணிகள் சுற்றிவர சுமார் 12000 ஏக்கர் இருப்பதாகவும், தீகவாபியின் வரலாறு பற்றிக் கூறும் புராதன நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அவதானிக்கின்றபோது கல்முனை முதல் பொத்துவில் வரையுள்ள காணிகள் தீகவாபி விகாரைக்கே சொந்தமாகின்றன என்றும் தயா கமகே தெரிவித்துள்ளார்.
அமைச்சரது இத்தகைய கூற்றுக்களும், செயற்பாடும் அவரது முகத்திரையைக் கிழித்து உண்மையான சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை அவர் இன்று இழந்துள்ளார்.
அதேவேளை முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளாகிய எம்மையும் அவரைப்போன்று தீவிர கடும்போக்காளர்களாக மாற்றும் சூழலையும் அவர் உருவாக்கியுள்ளார். ஆனாலும் நாட்டின் சூழல், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, எதிர்கால நலன் கருதி நிதானமாக செயற்படவேண்டிய கட்டாயத்தில் நாமுள்ளோம்.
இந்த நிலையில் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை இழந்துள்ள அமைச்சர் தயாகமகே பதவி வகிக்கும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆவன செய்யவேண்டும்.
நல்லாட்சியின் சகல சமூகங்களுக்கும் சமத்துவம், நல்லிணக்கமெனும் கருப்பொருள் உறுதிப்படுத்தப்பட வழிவகுக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.
If Daya Gamage was not removed, You SLMC man as a protest can you resign your post?
ReplyDeleteபோர்க்கொடி எங்க வீட்டுக்குள்ள இருந்தா? பாராளுமன்றில் போய் பேசுங்க ஹன்சாட்டில்.
ReplyDeleteசிலையை எந்த கொம்பனாலும் அகற்ற முடியாது என்று மன்சூர் தானே முதலில் சொன்னாரு. ஆப்புறம்தானே தயா கூடடம் நடந்தது.
மகிந்தாவோட இருக்கும்போது ரணிலை பத்தி இப்படித்தான் மோசமா டீவில ஒருநாள் பேசினீங்க என்று ஜாபகம்....
ஆனால் இன்று அதே ரணிலோட அமைச்சு பதவியுடன் இருக்கீங்க சார்.
யாரு யாருக்கு நடவடிக்கை எடுக்குற?
Before we remove Daya Gamage we have to remove Manzoor. He is the main culprit and betrayed the Muslim community. For the existance of SLMC this has to be done without any further delay.
ReplyDelete" என்னமோ செய்துகிட்டு இருந்தானாம் வந்த பஸ் போய்ட்டாம், எழும்பி பார்த்தானாம் (அப்பாதையால் கடைசியாக வருகின்ற) லொறியும் போய்ட்டாம்." என்கிற கதை மாதிரித்தான் இருக்கு நம்முட தும்பிர கதை.
ReplyDeleteபோன பஸ்சிக்கு பின்னால் கைகாட்டியே ஒண்டும் ஆகிறதில்லை.
ஆனால் இந்த எம்பி அந்த பஸ்சிக்கு பின்னால் போன லொறிக்கி கைகாட்டப்போறாராம்.
அய்யோ...............பாவம்...........
நீங்கள் கல்முனையில் பேசுவதை விட பாராளுமன்றதில் பேசுங்கள்
ReplyDeleteஇந்த நாலு சுவருக்குல் இரண்டு மூன்று மைக் முன்னால் அறிக்கை விடுவதால் யாரை முட்டாளாக்க முயற்சிக்கிறார். அரசை விட்டு வெளியே வரப்போவதாக பலமுறை அறிக்கை விட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அரசை விட்டு வெளியே வர முடியுமா அல்லது நல்லாட்சியை ஏற்படுத்தியவர்கள் என மீண்டும் மீண்டும் அறிக்கை விட்டு சலுகைக்காக சமுதாயத்தை காட்டிக் கொடுக்க போகிறாரா.
ReplyDeleteThey are leaders of the Muslim community. It is very shame. They can't open the mouth in appropriate places.
ReplyDeleteகல்முனை தமிழரிடம் ரௌடீசம் காட்டும் ஹரீஸ் தயாவிடம் பம்புகிறார்உங்க வீராப்பு எல்லாம் இம்புட்டு தான்.
ReplyDeleteஅறிக்கை விடுவதில் உலமா கட்சியை மிஞ்சிடுவார் போல் இருக்கிறது
ReplyDeleteஇதற்க ொமன்ட் பண்ணுவதற்கு கூட மனசு இல்லை
ReplyDeleteஒண்டுக்கும் உதவாத நல்ல் மனிதர்கள்.
அல்லாஹ் எமக்கு உதவி செய்வான் இன்ஸா அல்லாஹ
All the Muslim parliamentarian must learn Islam
ReplyDelete