அரசாங்கத்திற்கு 'ரட கயா' 'ரத கயா' நோய்
அரசாங்கமானது “வாகன மேனியா” (ரத கயா) மற்றும் “வெளிநாட்டு மேனியா” (ரட கயா) போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிறைப்பு பிரேரணையில் அமைச்சர்களுக்கான வாகனங்கள் மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்காக 790 மில்லியன் ரூபாவினை கோரியுள்ளது.
அரசாங்கம், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளவுயர்வு, அவர்களுக்கான எரிபொருள் தேவை மற்றும் மேலதிக கொடுப்பனவுகளுக்கு நிதி கோருமாயின் அதனை ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் தற்போதைய அரசாங்கமானது, வாகனங்கள், வெளிநாட்டு பயணங்களுக்கான செலவுகள் மற்றும் தளபாடங்களுக்கு நிதி கோருமாயின் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது.
இதனால் அரசாங்கம் இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Post a Comment