நியுஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமியும் தாக்கியது
நியுஸிலாந்தின் தெற்கு தீவை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கி உள்ள நிலையில், அதனைத்தொடர்ந்து சுனாமி தாக்கியுள்ளது.
கிறைஸ்ட்சர்ச்சில் இருந்து சுமார் 95 கி.மீ தொலைவில் 7.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, இரு மணி நேரங்கள் கழித்து வட-கிழக்கு கடற்கரையை சுனாமி தாக்கியது.
முதல் அலைகள் பெரியதாக இருக்க வாய்ப்பில்லை என்றும், பல மணி நேரங்களுக்கு சுனாமி தாக்கம் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் கடற்கரைக்கு அப்பால் செல்லுமாறும் அல்லது உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
bbc
அ னைத்து பாதிப்புகளில் இறருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக
ReplyDeleteAameen.
Delete