பெஷன்பக் தீக்கிரை, மின் கசிவே காரணம்
பொரலஸ்கமுவ, பெபிலியான ---வீரகேசரி-
சந்தியில் உள்ள பெஷன் பக் ஆடைக்களஞ்சியத்தில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக காரணம் வெளியாகியுள்ளது.
சந்தியில் உள்ள பெஷன் பக் ஆடைக்களஞ்சியத்தில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக காரணம் வெளியாகியுள்ளது.
தற்போது வரையில் இடம்பெற்றுள்ள விசாரணைகளின் அடிப்படையில் குறித்த ஆடைக்களஞ்சியத்தில் ஏற்பட்ட மின்கசிவே தீப்பரவலுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீ விபத்தில் ஆடைக் களஞ்சியத்தின் முதன்மை அலுவலகம் மற்றும் பிரமாண்ட காட்சியறை என்பன தீக்கிரையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
களஞ்சியசாலையில் பரவிய தீ குறித்து, மின் பொறியியலாளர் மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர்களது பரிசோதனை அறிக்கைகள் இன்று பொலிஸாரிடம் கையளிக்கப்படவுள்ளன.
தீ குறித்த பரிசோதனைகளை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்திருந்தனர். தீப்பிடிக்க காரணமாக இருந்தவை குறித்து உயர் தொழில்நுட்பம் முறைமைகளை கொண்டு சோதிக்கப்பட்டதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
சோதனைகளுக்காக ஆடையக வளாகத்திலுள்ள சிசிரிவி காணொளிகளும் சோதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
தீவிபத்தின் காரணமாக 30 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான பொருட்கள் தீயில் எரியுண்டு நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
are the police given back the CCTV hard disks without any damage.
ReplyDeleteOhhhh...sad...
ReplyDeleteHowever, I was waiting for the news may spread that it is happened bcs of SLTJ.....!!
Allah kaappaatti vittan....
In Srilanka , politicians decide how fire break out
ReplyDeleteunder strange circumstances !! I have a question
for "yahalanaya." Jus like the police acted swiftly
to arrest the CCTV recordings , why couldn't you
take control of the documents of frauds and
corruption that are allegedly reported to have been
destroyed leaving no evidence ? If you acted swift
this would have been possible ? Why delayed ?
In many other establishments this fire leak is likely.
So get them all double checked !