Header Ads



சூரா நஸ்ர், ஏன் இறங்கியது..?


திடீர் மரணங்கள், நமக்கும் சொல்லித்தரும் பாடம்

-ARM INAS-

சூரா நஸ்ர் இறங்கியதும் சில ஸஹாபாக்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். மீளாத ஒரு துயரத்தில் ஆழ்ந்தார்கள். பெறுமதியான எதனையோ இழக்கப் போவதனைப் போல் உணர்ந்தார்கள்.

ஏன் அப்படி???

சூரா நஸ்ர் நல்லதொரு செய்தியைத்தானே சொல்கிறது. அதற்கு ஏன் அவர்கள் அழவேண்டும். சூரா நஸ்ர் நல்ல மகிழ்ச்சியான செய்தியை சொன்ன போதும் அந்த சூரா சொன்ன மறைமுகமான செய்தி முழு ஸஹாபா சமூகத்தையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தக் கூடியது.

அத்தனை ஸஹாபாக்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தக் கூடிய அந்த மறைமுகமான செய்திதான் என்ன?

இந்த சூறாவை படித்து கண்ணீர் வடித்த ஸஹாபாக்கள் வாழ்க்கை தத்துவத்தை ஆழமாக புரிந்திருந்தனர். ஒவ்வொரு ஆன்மாவும் இவ்வுலகுக்கு அனுப்பப்படுவது ஒரு பாரிய பணியின் நிமித்தமே.

ஆம் இறுதித்தூதரும் அவ்வாறான ஒரு பாரிய பணிக்கே இவ்வுலகுக்கு அனுப்பப்பட்டிருந்தார். அல்லாஹ் நபிகளாருக்கு வழங்கிய அப்பாரிய பணியை சிறப்பாக செய்து முடித்துவிட்டார்கள் நபிகளார். அப்பணியை சிறப்பாக செய்து முடிப்பதில் வெற்றி கண்டுவிட்டார் அதனை சூரா நஸ்ர் சொல்கிறது.

ஆம் இவ்வுலகில் நமது பணி முடிந்துவிட்டால் இவ்வுலகில் நமக்கு என்ன வேலை? அடுத்த கட்டம் மரணம் என்ற பயணத்தினூடாக அல்லாஹ்வின் பால் சென்றடைவததும் நாம் இவ்வுலகில் நம் பணியை சிறப்பாக வெற்றிகரமான நிறைவேற்றியதற்காக அவன் நமக்கு பரிசளிக்க காத்திருக்கும்  எந்தக் கண்களும் கண்டிராத அந்த இன்பங்களை அனுபவிப்பது மாத்திரம் தான்  எஞ்சியிருக்கும்.

ஆம், நபியின் பணி இவ்வுலகில் முடிவடைந்துவிட்டது. அடுத்த கட்டம் நபிகளார் மரணம் என்ற பயணத்துக்கு தயாராக இருக்கிறார் என்பதனை நபிகளார் மரணத்தின் மூலம் நம்மை பிரியப்போகிறார் என்பதனை உணர்ந்த அறிந்த ஸஹாபாக்கள் நபியை பிரிய மனமில்லாமல் மீளா துயரத்தில் ஆழ்ந்து கண்ணீர் வடித்து அழுதார்கள்.

நபிகளாருக்கு மட்டுமல்ல. இப்பூவுலகில் பிறக்கும் ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு பணி வழங்கப்பட்டுள்ளது. நாம் இப்பூமிக்கு அனுப்பப்பட்டதன் நோக்கம் நிறைவேறிவிட்டால் நமது பணி முடிந்துவிட்டால் இப்பூமியில் நமக்கு வேலைகள் ஏதும் இருக்காது.

அல்லாஹ்வின் வெகுமதிகளை அருட்கொடைகளை எந்த தடைகளுமின்றி அனுபவிக்க மரணம் என்ற  பயணத்தை மேற்கொண்டு அல்லாஹ்வின் பால் சென்றுவிட வேண்டும். அது தான் உலக நியதி.

உஸ்தாத் ஷெய்க் அகார் அவர்களின் பாரியாரின் மரணமும் அதனைத்தான் நமக்கு உணர்த்துகிறது. அந்த விபத்து நடந்த விதமும் நமக்கு அதனைத்தான் உணர்த்துகிறது. ஷெய்க் அகாரின் பாரியார் இவ்வுலகுக்கு எதற்காக அனுப்பப்பட்டாரோ அந்தப் பணியை அவரின் பாரியார் சிறப்பாக செய்து முடித்துவிட்டார் அதற்கு ஷெய்க் அகாரும் அவரின் குடும்பத்தாருமே சாட்சி. அல்லாஹ் ஷெய்க் அகாரையும் அவரது குடும்பத்தாரையும் ஏன் எங்களையும் உங்களையும் இவ்வுலகில் உயிருடன் விட்டுவைக்க காரணம் என்ன? நாம் மட்டும் ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறோம்? பதில் ஒன்று தான் அல்லாஹ் நம்மை ஏன் இவ்வுலகுக்கு அனுப்பினானோ எந்தப் பணிக்காக அனுப்பினானோ? அப்பணி இன்னும் நிறைவு பெறவில்லை. 

அல்லாஹ் நம்மிடம் இன்னும் பல பணிகளை, வேலைகளை  நம்மிடம் வாங்க இருக்கிறான் நம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதே அதன் அர்த்தம். உலகில் நிகழும் ஒவ்வொரு மரணமும் இந்த செய்தியை தான் நமக்கு சொல்லிக்கொண்டிருக்கிறது உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் சொல்லிக்கொண்டிருக்கிறது.

இறுதியாக நம்மை சேர்ந்த  நம்மோடு பல காலம் ஒட்டு உறவாடிய ஒரு உறவை இழப்பதன் வலியை அந்த இழப்பை சந்தித்தவரை தவிர வேறு யாராலும் உணர முடியாது. ஆறுதல் சொல்லி அந்த வலியை போக்கவும் முடியாது ஆனாலும் அவரின் குடும்பத்ததுக்காகவும் இந்த பாரிய இழப்பை தாங்கிக்கொள்ளும் சக்தியை அல்லாஹ் அவருக்கு கொடுக்க வேண்டும் எனவும் அல்லாஹ்வை இறைஞ்சுகிறேன்.

உஸ்தாத் அகார் அவர்கள் இந்த நாட்டு மக்களுக்கு செய்த பாரிய பணியையும்
அவர் இனிமேல் செய்ய வேண்டிய பணியின் ஆழத்தையும் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது. அவரின் பாரியாரின் ஜனாஸாவுக்கு வந்த மக்கள் ஜனத்திரளையும் அவருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் இந்த நிமிடம் வரை வந்து குவிந்துகொண்டிருக்கும் துஆக்களையும் பார்த்த போது..!

2 comments:

  1. ya ALLAH, grant her the highest place in jennethul firdows.

    ReplyDelete
  2. The best what we could do is a simple dhua for her and da family

    ReplyDelete

Powered by Blogger.