பொதுபல சேனாவிடம், விளக்கம் கோரவுள்ளோம் - ரிஸ்வி முப்தி
பொதுபலசேனா அமைப்பு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் பூரணத்துவமற்ற கடிதமாகும். அக்கடிதம் எவருக்கும் விலாசமிடப்படவில்லை.
தலைவருக்கா? அல்லது செயலாளருக்கா? எனக் குறிப்பிடப்படவில்லை. அனுப்பியவரின் பெயர் விபரங்களும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் பொது பலசேனாவின் கடிதத்தலைப்பில் அனுப்பப்பட்டுள்ளது. அதனால் இது தொடர்பான விபரங்களை அந்த அமைப்பிடம் கோரவுள்ளோம் என அகில இலங்கை ஐம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அடங்கியுள்ளவைகள் அனைத்தும் முழுப் பொய்யாகும். பிற மதங்களை நிந்திப்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று எனக் குற்றம் சுமத்திப் பல குர்ஆன் அத்தியாயங்களைச் சுட்டிக்காட்டி அதற்கான தெளிவுகளை வழங்குமாறு நேற்று முன்தினம் பொதுபலசேனா அமைப்பு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபைக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தது.
நான்கு பக்கங்களைக் கொண்ட குறித்த கடிதம் தொடர்பில் வினவிய போதே உலமா சபைத்தலைவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
பொதுபலசேனா கோரியுள்ள விளக்கங்களை நாம் வழங்குவதற்குத் தயாராகவுள்ளோம். எமது தெளிவுகள் உண்மை நிலையை அவர்களுக்கு உணர்த்தும் என நம்புகிறோம்.
அவர்கள் கோரியுள்ளவற்றுக்கு தெளிவுகளையும் விளக்கங்களையும் நாம் வெளியிட்டுள்ள புத்தகங்கள் மூலம் ஏற்கனவே வழங்கியுள்ளோம். இப்புத்தகங்கள் சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ளன. “சமூகங்களுக்கிடையில் சக வாழ்வுக்கான கலந்துரையாடல்” எனும் புத்தகத்தில் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சமாதானம் மற்றும் சகவாழ்வை நோக்காகக் கொண்டே இப்புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அல்கைதா, ஜிஹாத் அடிப்படைவாதம், இஸ்லாமிய பயங்கரவாதத்தின் யதார்த்தம் என்ற தலைப்புகளில் தெளிவுகள் வழங்கப்பட்டுள்ளன.
என்றாலும் அவர்களுக்கு மேலும் தெளிவுகளை வழங்க உலமா சபை தயாராக இருக்கிறது. குர்ஆனின் சில வசனங்களில் அவர்கள் இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறார்கள்.
தெளிவுபடுத்துவது எமது கடமையாகும். குர் ஆனின் போதனைகள் மக்களை நல்வழிப்படுத்துகின்றனவேயன்றி தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை. அனுமதிக்கவில்லை. குர்ஆன் கருணையையும் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையுமே போதித்துள்ளது
ARA.Fareel
well done go ahead Mr. Rizvi.. Don`t stop your voice.....
ReplyDeleteமௌலவி ரிஸ்வி முப்தி அவர்களே,ஏன் அவர்கள் கடித்தை மக்களுக்கும் வெளிப்படுத்தக் கூடாதா?முஸ்லிங்களுக்கும் வெளிப்படை யதார்த்தம் விளங்கும் தானே?
ReplyDeleteவிதண்டாவாதம் பேசும் பொதுபல வின் வாதங்கள் எங்களை போன்ற பாமர மக்களுக்கே புரிகிறது. இஸ்லாமிய அடிப்படையில் ஹிக்மத்தான விளக்கம் தான் வேண்டும்.
ReplyDeletePoli Raaja Raani velayaattu...aadunga aadunga...ungal aattam conj nalaikku...!
ReplyDeleteBBS'ன் கடிதம் தலைவருக்கா, செயலாளருக்கா என்று பொது மக்களிடம் அறிக்கை விட்டு ஆராய்வதை முதலில் விடுங்கள். பெரும்பாண்மை மக்களுக்கு இஸ்லாத்தை பற்றி எற்றி வைப்பதற்கு ஒரு அறிய சந்தர்ப்பத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியுள்ளான். புத்தி ஜீவிகளை ஒன்றிணைத்து இதற்க்கு அறிய பதிலை மக்களுக்கு பொய் சேரும் வகையில் வழங்க வேண்டும். இந்த பெரும் பொறுப்பை அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான்.மேலே ஸஹோதரர் சொன்னது போல, ஹிக்மத்தான விளக்கம் தான் வேண்டும்.
ReplyDeleteவிளங்கிக்கொள்ளும் நோக்கில் கேட்டிருந்தால் சரி விதண்டாவாதம் செய்வது தானே அவர்களின் நோக்கம் என்றாலும் நாம் ஹிக்மா மெள்இளதுல் ஹஸனஹ்வை கடைபிடிப்போம்
ReplyDeleteMuthi awarkale SUMMA NOTICE WITTUTU IRKKAMA THELIVANA PATHILAI KODUKKAWUM.............AHHH KUDUKKAMATTINGA
ReplyDeleteதலைவருக்கா அல்லது செயலாளருக்கா என விலாசமிடப்படாதது ஒரு பிரச்சினையே இல்லை.அதை விடுத்து இந்த விளக்க கோரிக்கையை இஸ்லாத்தைப் பற்றி அதன் சிறப்பம்சங்கள் உண்மைகளைப் பற்றி எடுத்துக் கூற ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம்.
ReplyDelete