Header Ads



விஜயதாஸாவின் கருத்து, அவராலேயே வாபஸ் பெறப்பட வேண்டும்

ஐ எஸ் பற்றிய நீதி அமைச்சரின் கருத்து இன்னமும் அவரால் பாராளுமன்றத்தில் வாபஸ் பெறப்படாத நிலையில் இலங்கையிலிருந்து எவரும் ஐ எஸ்ஸில் இல்லை என அரசாங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது என சில தரப்பினர் கூறுவது முஸ்லிம் சமூகத்தை பிழையாக வழிநடாத்துவதாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,

இலங்கையிலிருந்து 32 பேர் ஐ எஸ்ஸில் இணைந்துள்ளனர் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து என்பது தனக்கு கிடைத்த தகவலை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே சொன்னேன் என நீதி அமைச்சர் கூறியிருப்பது சிறு பிள்ளைத்தனமானது. அவர் இது பற்றி பாராளுமன்றத்தில் பேசுமுன் குறைந்தது அமைச்சரவையில் அல்லது அமைச்சரவையில் உள்ள முஸ்லிம் அமைச்சர்களுடனாவது உரையாடியிருக்க வேண்டும். ஆனாலும் அவரது பேச்சு ஹன்சாட்டில் பதிவு பெற்றுள்ளதால் எத்தனை வருடங்கள் சென்றாலும் இக்குற்றச்சாட்டு உண்மையானதாகவே வரலாற்றில் பதிவு பெற்றதாக இருக்கும்.

இதே வேளை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஐ எஸ்ஸில் இலங்கையர் எவரும் இல்லை என ஊடகங்கள் வாயிலாக அறிவித்துள்ளார். இதனை சில முஸ்லிம் ஊடகங்கள் ஐ எஸ்ஸில் இலங்கை முஸ்லிம் எவரும் இல்லை என அரசாங்கம் அதிரடியாக அறிவித்துள்ளதாகவும், வேறு ஊடகங்கள் இது விடயத்தில் அரசுக்குள் முரண்பாடு என தலைப்பிட்டுள்ளதையும் காண்கிறோம். உண்மையில் நீதி அமைச்சரின் கருத்து பாராளுமன்றத்தில் அவராலேயே வாபஸ் வாங்கப்படாத வரை இது விடயத்தில் அரசுக்குள் முரண்பாடு உள்ளதாகவே அமைச்சர் ராஜிதவின் கருத்து கணிக்கப்படும் என்பதே உண்மையானதாகும்.

நீதி அமைச்சரின் மேற்படி கருத்து அவராலேயே பாராளுமன்றத்தில் மறுக்கப்பட்டு அதனை ஹன்சாட்டில் இணைப்பதற்கான முயற்சிகளை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் அமைப்புக்களும் முயல வேண்டுமே தவிர வெறுமனே நீதி அமைச்சரை சந்தித்து அவருக்கு மட்டும் விளக்கமளித்து விட்டு அமைதியாக இருப்பது சமூகத்தை ஏமாற்றி எதிர் கால சமூகத்தை இக்கட்டுள் தள்ளிவிடும் முயற்சியாகும்.

ஆகவே ஐ எஸ்ஸில் இலங்கையர் எவரும் இல்லை என்ற அமைச்சர் ராஜிதவின் கருத்தை அரசாங்கத்தின் கருத்தாக உலமா கட்சியால் பார்க்க முடியவில்லை. அவ்வாறு அது அரசின் கருத்தாக இருந்தால் அதனை ஏற்று கட்டுப்பட்டு அக்கருத்தை நீதி அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிவித்து இதுவே அரசாங்கத்தின் கருத்து என அறிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாத வரை அமைச்சர் ராஜிதவின் கருத்து வெறுமனே முஸ்லிம் சமூகத்தை தாஜா பண்ணும் சராசரி அரசியலாகவே இருக்கும் என்பதை உலமா கட்சி சொல்லிக்கொள்கிறது.  

4 comments:

  1. Yes he has to take back his fake information

    ReplyDelete
  2. Your giving statment from eastern province.please come and join with acju shoora council or muslim council .dont blame each other.we can blame any body easily.but practically very difficule to solve the problem.pls be unite with following groups.may allah guide us

    ReplyDelete
  3. விஜயதாசவாவது, வாபஸ் பெறுவதாவது???

    ReplyDelete
  4. Sana Faleel, Can you unit at least those 23 Musi+lim amaippugal...?

    ReplyDelete

Powered by Blogger.