முஸ்லிம்களின் விவகாரம், ரணிலின் கவனத்திற்குச் செல்கிறது
சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் பொலிஸாரின் சட்ட நடவடிக்கை தாமதமடைவது குறித்தும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் எம்.பி.க்கள் அனைவரும் கட்சியின் செயலாளர் கபீர் ஹாஸிமின் தலைமையில் இன்று அல்லது நாளை பாராளுமன்றக் கட்டடத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளனர்.
நேற்றைய தினம் ஆளும் கட்சியின் குழுக் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத சக்திகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை மற்றும் அதற்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து ஐ.தே.க.வின் செயலாளர் கபீர் ஹாஸிமிடம் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் முறையிட்டதையடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
கேகாலை மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான கபீர் ஹாஸிம், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான எம்.எச்.ஏ.ஹலீம், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம்.மரிக்கார், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் இன்றைய தினம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் ஒன்றுகூடி முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவுள்ளனர்.
குறிப்பாக தனியார் சட்டத் திருத்தம் குறித்த தெளிவற்ற தன்மை, கடும் போக்கு சக்திகளின் மீள் எழுச்சியும் அவர்களின் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரமும், குருநாகல் மாவட்டத்தில் பள்ளிவாசல்களுக்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் மற்றும் இறக்காமம் பிரதேசத்தில் சிலை வைக்கப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று அல்லது நாளைய தினம் ஐ.தே.க. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள் குறித்து அவருக்கு தெ ளிவுபடுத்துவதுடன், இதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் சுட்டிக்காட்டவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
MP pazaviyai pazuhakka(dhaya gamageya oruvakkiyazu nari than)
ReplyDeleteஎன்னா இலங்கை பிரதமர் பேபர் கீபர் பார்க்கிறது இல்லையோ ? ஜனாதிபதி என்றால் நிறைய பேபர் பார்த்து நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வார் யாரும் போய் அவரிடம் சொல்ல தேவை இல்லை பின் நடவடிக்கையும் எடுப்பார் ஹிஹிஹிஹி
ReplyDeleteமிக அவசரமாக ரணிலின் கவனத்துக்கு கொண்டுசென்றவரை பாராட்ட வேண்டும்.
ReplyDelete