ஆசிரியை ஏ.எல்.நஸீபா இக்பால் 'குருபிரதீபா பிரபா' விருதை பெற்றார்
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி ஆசிரியையான . ஏ.எல்.நஸீபா இக்பால் 'குருபிரதீபா பிரபா' விருதை பெற்றுள்ளார். கொழும்பு தாமரைத்தடாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்விருதை வழங்கி கௌரவித்துள்ளார். இதேவேளை விருதுபெற்ற இவரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் அண்மையில் இடம்பெற்றது.
சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலயம், அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயம், அல்-முனவ்வறா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி கற்ற இவர், கல்எலிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியின் பழைய மாணவியாவார்.
அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூhயில் டிப்ளோமா பட்டத்தையும் தென்கிழக்கு பல்கலைக்கழக்கத்தில் கலைப்பட்டதாரி பட்டத்தையும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்கல்வி டிப்ளோமாவையும் பெற்றுக்கொண்ட இவ் ஆசிரியை, அகில இலங்கை தமிழ் மொழித் தினம் மற்றும் தேசிய மீலாத் தினம் போன்ற போட்டி நிகழ்ச்சிகளில் மாணவர்களை பங்குகொள்ளச் செய்து சாதனைகள் படைப்பதற்கு முன்னின்று செயற்பட்டவராவார். இவர், மர்ஹூம் எம்.ஏ.ஆதம்லெப்பை (குணம் மாஸ்டர்), எம்.ஐ.சுபைதா உம்மா தம்பதியினரின் புதல்வியாவார்.
Post a Comment