Header Ads



மிகவும் வருந்துகிறேன், தோல்வி தந்த வலி நீங்க நீண்டநாட்கள் ஆகும் - ஹிலாரி

அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப்
தலைமையேற்று வழிநடத்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று தோல்வியடைந்த அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் தெரிவித்திருக்கிறார்.

'மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. தோல்வி தந்த வலி நீங்க நீண்ட நாட்கள் ஆகும். ட்ரம்ப் அதிபர் ஆவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ட்ரம்புக்கு நாட்டின் சார்பில் வாழ்த்து சொல்கிறேன். நாட்டு நலனுக்காக இணைந்து பணியாற்ற உள்ளதாக அவரிடம் தெரிவித்தேன்'

 எல்லா அமெரிக்கர்களுக்கும் டிரம்ப் வெற்றிகரமான அதிபராக விளங்குவார் என நம்புவதாகத் தெரிவித்தார்.

"நாம் எண்ணியதைவிட அதிக ஆழமாக நமது நாடு பிளவுபட்டுள்ளது என்பதை நாம் கண்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.

அதிர்ச்சிகரமான வெற்றிக்குப் பின்னர் அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் அரசியல் சாசனம் அமைதியாக அதிகார மாற்றம் நடைபெறுவதை புனிதமாக போற்றுவதால், தேர்தலின் முடிவுகளை மதிக்க வேண்டும் என்று ஹிலரி ஆதரவாளர்களிடம் வலியுறுத்தினார்.

நாம் பகிர்ந்து கொண்ட மதிப்பீடுகளுக்காகவும், நமது நாட்டிற்கென வைத்திருந்த லட்சியத்திற்காகவும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்பதற்கு மிகவும் வருந்துகிறேன் என்று நியூயார்க்கில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஹிலரி கிளிண்டன் குறிப்பிட்டார்.

"நாம் இன்னும் அந்த உயரமான, கடினமான கூரையை சிதறடிக்கவில்லை. ஆனால் ஒரு நாள் யாராவது ஒருவர் அதனை செய்வார்கள்" என்று முதல் பெண் அதிபராக உருவாகுவதில் தோல்வியடைந்ததை குறிப்பிட்டு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.