இலங்கையின் கொத்துரொட்டி குறித்து, ஜப்பானிய பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி
இலங்கையில் கொத்துரொட்டி தயாரிக்கப்படும் சத்தம், சுதந்திரம் மற்றும் வீடுகளின் எதிரொலிகளையும் வெளிக்காட்டுவதாக ஜப்பானிய செய்தித்தாள் ஒன்று தெரிவிக்கிறது.
நிக்கி ஆசியன் ரிவ்யூ என்ற செய்தித்தாளுக்காக கிழக்கின் மட்டக்களப்பில் இருந்து நிலைமைகளை விளக்கியுள்ள செய்தியாளர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் சொப்ட் ரொட்டி என்ற கொத்துரொட்டி தயாரிப்பதற்காக முதலில் அடுப்பில் தகரத்தை வைத்து அதற்கு எண்ணெய் ஊற்றி,பின்னர் முட்டைகளை உடைத்து அதில் இட்டு, பின்னர் துண்டுகளாக நறுக்கப்பட்ட ரொட்டிகள் இடப்பட்டு சத்தம் கேட்கும் அளவுக்கு கொத்துரொட்டி தயாரிக்கப்படுகிறது.
கடந்த 1970களில் மட்டக்களப்பில் வீதி உணவாக கொத்துரொட்டி தயாரிக்கப்பட்டது.
எனினும் சிறப்பான கொத்துரொட்டியை கொழும்பில் பெற்றுக்கொள்வதற்கே அநேகமானோர் விருப்பம் கொண்டிருந்தனர். அதில் தாமும் ஒருவர் என்று ஆசியன் ரிவ்யூ செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கொத்து ரொட்டி தயாரிக்கப்படும் சத்தம் பொதுச் சூழலில் அமைதியை விரும்பும் மனித(ர்களின்) உரிமை மீறலாகும்.
ReplyDeleteஇது போன்றதே, ஐஸ் கிரீம் போன்ற பண்டங்களை விற்பதற்காக பொது இடங்களில் எழுப்பப்படும் இசை, அதனை வாங்க வசதியற்று ஏங்கும் ஏழைச் சிறுவர்களின் மனித உரிமை மீறலாகும்.
இவற்றை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை சிறுவர் மற்றும் மனித உரிமை அமைப்புகள் அக்கறையுடன் உழைக்க வேண்டும்.
அப்போ பஸ்ஸில் பாட்டு போட்றது? பள்ளிவாசலில் சுபஹுத்தொழுகைக்கு பாங்கு சொல்லுவது?
ReplyDeleteபாசி அவர்களே இந்த வெளிநாட்டு போலி மனித உரிமை குமுறல்களை நீங்கள் மனதில் போட்டுக்கொள்ள வேண்டாம்.
இப்படி சொல்லி சொல்லித்தான் சிறுவர்களை extreme games , extreme music போன்றவைகைளை உபயோகப்படுத்த வைத்து அவர்களை Half Deaf ஆகவே மாற்றிவிட்டார்கள். எப்போதாவது கேட்கும் கொத்து ரொட்டி ( ஆன இதுக்கு Soft Rotty என்று சொன்னதுதான்அதிர்சியான விடயம்) சத்தம் அவ்வளவு பாதிப்பானதல்ல.