தொழுகையில் ஈடுபடாதவர்களை கொல்ல, உத்தரவிட்ட இமாம் கைது - சுவிஸில் சம்பவம்
சுவிட்சர்லாந்து நாட்டில் மசூதிக்கு சென்று தொழுகையில் ஈடுப்பட மறுக்கும் இஸ்லாமியர்களை கொன்று குவியுங்கள் என உத்தரவிட்ட இமாம் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சுவிஸின் Winterthur நகருக்கு அருகில் உள்ள மசூதி ஒன்றில் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் இமாமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ‘மசூதிக்கு வந்து தொழுகையில் ஈடுப்பட மறுக்கும் இஸ்லாமியர்களை கொன்று குவியுங்கள்’ என ஒரு அதிரடி உத்தரவை பிறபித்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்ட பிறகு நேற்று முன் தினம் பொலிசார் மசூதியில் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
அப்போது, இஸ்லாமியர்களுக்கு உத்தரவிட்ட இமாம் உள்பட 5 பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்தனர்.
இது குறித்து பொலிஸ் அதிகாரி பேசியபோது, ‘பொதுமக்கள் மத்தியில் வன்முறையை தூண்ட முயற்சித்தது, மேலும் இனவெறியை தூண்டும் விதத்தில் உத்தரவிட்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமில்லாமல், இமாம் உள்ளிட்ட இந்த 5 பேருக்கும் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக என விசாரணை செய்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தி நம்பகத்தன்மையற்றது எந்த இமாமும் இப்பணி கூற 0% கூட வாய்ப்பிள்ஐ
ReplyDelete