கொழும்பில் பலஸ்தீன, ஒருமைப்பாட்டு தின நிகழ்வு
பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான இலங்கை ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள ஐக்கிய நாடுகளின் பலஸ்தீன ஒருமைப்பாட்டு தின நிகழ்வு எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.15 மணிக்கு கொழும்பிலுள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது.
இவ் வைபவத்தில் சுகாதார அமைச்சரும் இலங்கை , பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் இலங்கைக்கான தலைவருமான டாக்டர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாகவும் மேற்படி சங்கத்தின் இலங்கைக்கான செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்கின்றனர்.
சிரேஷ்ட ஊடகவியலாளரும் சமூக நீதிக்கான செயற்பாட்டாளருமான மஹிந்த ஹத்தக விசேட உரை நிகழ்த்துவார். இந்த வைபவத்தில் புகைப்படக் கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மாலை 4.15 முதல் 6. 00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பலஸ்தீன போராட்டத்திற்கான தமது ஆதரவை வழங்குமாறு பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான இலங்கை ஒன்றியம் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
பலஸ்தீன மக்களுக்கான சர்வதேச ஒருமைப்பாட்டு தினம் என்றால் என்ன?
1977ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச்சபை பலஸ்தீன மக்களுக்கான சர்வதேச ஒருமைப்பாட்டுத் தினத்தை ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி அனுஷ்டிக்குமாறு அழைப்புவிடுத்தது. 1947ஆம் ஆண்டு மேற்குறிப்பிட்ட அதே தினத்தில் பலஸ்தீனின் பிரிவினைக்கான பிரேரணையையும் பொதுச்சபை ஏற்றங்கீகரித்திருந்தது.
பலஸ்தீனிய மண்: அது என்னவாக இருந்தது? அங்கு யார் இருந்தனர்? எவ்வளவு காலத்திற்கு?
பலஸ்தீன் குறித்து அறிந்துகொள்ள வேண்டுமெனில் கி.மு. 3000 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். 1900 ஆண்டுகள் (கி.மு.3000-– 1100) கானானியர் என்றழைக்கப்பட்ட மக்களின் பூமியாக அது திகழ்ந்தது. அக்காலப்பகுதி முழுவதும், அதாவது கி.மு. 1200 இல் பிலிஸ்டைன்ஸ் மக்கள் அதனைக் கைப்பற்றும் வரை, எகிப்தியர்கள் அங்கு நிலைகொண்டிருந்தனர். பிலிஸ்டைன்ஸ் அதனைக் கைப்பற்றிய பின்னர் அவர்கள் இஸ்ரவேலர்களாலும் (கி.மு.1000-– 923: 77 ஆண்டுகள்), பீனீசியர்களாலும் (கி.மு.923-– 700), அசிரியர்களாலும் (கி.மு.700 –-612), பாபிலோனியர்களாலும் (கி.மு.539 வரை), பாரசீகர்களாலும் (கி.மு.332 வரை), மசிடோனியர்களாலும் (கி.மு.63 வரை), உரோமானியர்களாலும் (கி.பி.636 வரை), அரேபியர்களாலும் (636 –-1200: 564 ஆண்டுகள்), சிலுவைப் போராளிகளாலும் (1099-– 1291), அய்யூபியர்களாலும் (1187-– 1253), மம்லூக்கியராலும் (1253-– 1516), உஸ்மானிய ஆட்சியாளர்களாலும் (400 ஆண்டுகள்) பின்தொடரப்பட்டனர். இவை 1917ஆம் ஆண்டு (பல்போர் பிரகடன ஆண்டு) வரை தொடர்ந்து இடம்பெற்றவை. பின்னர் அது 1919 இல் பிரித்தானிய மேலாதிக்கத்தினால் கைப்பற்றப்பட்டு, 1922 இல் உத்தியோகபூர்வமாக வலுவுக்கு வந்தது.
பலஸ்தீனிய மண்ணில் குடியமர்ந்த பல இராச்சியங்களுள் ஒன்றுதான் யூத இராச்சியம் என்பது மேற்படி காலவரிசையிலிருந்து புலனாகின்றது. 7ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் அந்நாடு மிகப் பிரதானமாக ஓர் அரபு (மற்றும் இஸ்லாமிய) நாடாக உருவாகியது. அரபு (முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ) மற்றும் யூத கலாசாரங்களின் மிகையானதொரு கலப்புடன் அது 1516இல் உஸ்மானியப் பேரரசின் ஒரு மாகாணமாக உருவெடுத்தது. பலஸ்தீன் என்றழைக்கப்பட்ட பூமி தமக்கே உரித்தானதென இந்த மக்கள் தம்மளவில் நம்பினர்.
இறுதியில் பேரரசுகள் காணாமற்போன போது, இறைமையானது அந்த மண்ணைச் சேர்ந்த பழங்குடி மக்களின் இயற்கையான குறிக்கோளாக உருமாறியது. விட்டுச்செல்வதற்குக் காலனித்துவம் மறுத்த இடங்களிலெல்லாம், சுதந்திரம் அடையப்பெறும் வரை, உள்நாட்டு விடுதலைப் போர்கள் நடந்தேறின. ஆக்கிரமித்துக்கொண்ட சமூகத்தினர் பிரயோகித்த முரட்டுத்தனமான பலப்பிரயோகத்தினூடாக மக்கள் நிர்மூலமாக்கப்பட்ட அல்லது இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்ட இடங்களில், அவ்விதம் ஆக்கிரமித்த சமூகங்கள் புதிய தேச அரசுகளாக உருவாகின
முதலாம் உலகப்போரின் பின்னர் வெற்றியீட்டிய நேச நாடுகள் மத்திய கிழக்கில் 1916ஆம் ஆண்டு கைச்சாத்திட்ட துரோகத்தனமான சைக்ஸ்-பிகொட் (Sykes-Picot) உடன்படிக்கைக்கமைய, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கு இடைப்பட்ட பிராந்தியத்தைப் பிரித்துக்கொண்டன. நாடுகளின் ஒன்றியத்தின் கீழ் (League of Nations) செயற்பட்ட பணிப்பாணை கொண்ட இந்த அரசுகள் தமது பணிப்பாணைக் காலப்பகுதி முடிவுக்கு வந்ததும், ஈற்றில் தேசியம்சார் அரசுகளாக பரிணாமம் அடைந்தன. நிச்சயமாக பலஸ்தீனைத் தவிர.
இன்றைய நிலை
30 சதவீத யூத மக்களுக்கு 55 சதவீத நிலத்தையும், 70 சதவீத மக்களுக்கு 45 சதவீத நிலத்தையும் வழங்கி ஐக்கிய நாடுகளின் தலையீட்டுப் பிரிவொன்றினால் இஸ்ரேல் உருவமைக்கப்பட்ட தினத்திலிருந்து, பலஸ்தீன மண்ணை இஸ்ரேல் அபகரித்துக்கொண்டும் சூறையாடிக்கொண்டுமே இருக்கின்றது. இஸ்ரேலுக்கும் அதன் அண்டைய அரபு நாடுகளுக்கும் இடையே 1948, 1967 மற்றும் 1973 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒவ்வொரு பாரிய யுத்தத்தின் போதும், அதன் பின்னரும், பலஸ்தீன மண்ணின் பெரிய பகுதிக்கூறுகளை இஸ்ரேல் ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக்கொண்டு வந்துள்ளது.
சர்வதேசத்தின் கருத்தை வெளிப்படையாக மீறியும், சர்வதேச சட்டத்தை மீறியும், தான் ஆக்கிரமித்துக்கொண்ட பலஸ்தீன நிலப்பரப்பினுள் யூதக் குடியேற்றங்களையும், இராணுவ எல்லைக் காவலரண்களையும் இஸ்ரேல் தொடர்ச்சியாகக் கட்டியெழுப்பி வருகின்றது.
அதேவேளை, (எகிப்திலுள்ள) நைல் நதிக்கரையிலிருந்து (ஈராக்கிலுள்ள) யூப்ரடீஸ் நதிக்கரை வரை பெரிய இஸ்ரேலை விரிவுபடுத்தும் தனது கனவை அடைந்துகொள்ளும் வரை இஸ்ரேல் உலகின் மிகப்பெரும் திறந்தவெளிச் சிறைக்கூடமான காஸாக் கரையிலும் மேற்குக் கரையிலும் பலஸ்தீன மக்களை அடக்கியொடுக்கும் பொருட்டு தொடர்ச்சியான யுத்தக் குற்றங்களை இழைத்து வருகின்றது. தான் ஜோர்தானுக்கு அருகாமையில் ஆக்கிரமித்துக்கொண்ட மேற்குக் கரையிலுள்ள பெரியதொரு செழிப்பான நிலப்பகுதியை தன்னால் உரிமை கொண்டாடக்கூடியதாக உள்ளதென இஸ்ரேல் அண்மையில் தெரிவித்திருந்தது.
இடைவிடாத பிரச்சினைகளும் இஸ்ரேலுடைய விட்டுக்கொடுக்காத பண்பும்
குடியேற்றங்களை நிறுவுதல்: ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட பலஸ்தீன நிலப்பகுதிகளினுள் குடியேற்றங்களை நிறுவிவருகின்றமையை நிறுத்துவதற்கான உளக்கருத்து தனக்கில்லை என்பதை இஸ்ரேல் மீண்டும் மீண்டும் பல தடவைகள் நிரூபணம் செய்துள்ளது.
அகதிகளைத் திருப்பியனுப்புதல்: தமது கிராமங்களிலிருந்து ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மில்லியன் கணக்கான பலஸ்தீனியர்களை வரவேற்று அடைக்கலம் கொடுப்பதற்கு இஸ்ரேல் மறுத்து வருகின்றது.
ஜெரூசலத்தின் அந்தஸ்து: எதிர்காலத்தில் அமையவுள்ள பலஸ்தீன் அரசின் தலைநகராக கிழக்கு ஜெரூசலம் அமையவேண்டுமென பலஸ்தீனியர்களும் சர்வதேச சமூகமும் வலியுறுத்தி வருகின்றமை ஒருபுறமிருக்க, ஒட்டுமொத்த ஜெரூசலத்தையும் இஸ்ரேல் வேண்டிநிற்கின்றது.
UN satisfying our Muslims by appointing a DAY for Palestine, while allowing and not stopping ISREAL land stealing programs.
ReplyDeleteThey are Good at pinching the baby and moving the cradle.
இஸ்ரேலியர்கள் இதுவரை கைப்பற்றிய பகுதிகள் 'இஸ்ரேல்' எனவும், பலஸதீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் 'பலஸ்தீனம்' என UN சட்டபூர்வமாக அறிவிக்கவேண்டும். பிரச்சனையும் முடிந்தது.
ReplyDeleteஇதே போல், நூற்றாண்டுகளுக்கு முன்னர் துருக்கி-சிரியா பகுதிகளிலிருந்து, இனவழிப்பு செய்யப்பட்டு துரத்தப்பட்ட 'அஸ்சிரியர்கள்' (கிருஸ்தவர்கள்) மக்களுக்கு இப்பகுதியில்
புதிய நாடு ஒன்று உருவாக்கப்பட்டு, மீழகுடியேற்ற வேண்டும். இதற்கு USA/UK/ரஸ்யா/பிரான்ஸ் முயற்சி செய்ய வேண்டும்.