Header Ads



அல்லாஹ்வின் நாட்டத்தை பாருங்கள்...!


-மு.மு.மீ-

இறைவன் சிலருக்கு பதவியை பறித்து இழிவுப்படுத்துவான், சிலருக்கு பதவியை கொடுத்து இழிவுப்படுத்துவான்.

பிரதமர் பதவியை அடைய வேண்டும் என்பதற்காக முஸ்லிம்களின் இரத்தத்தை குடித்த அத்வானிக்கு பிரதமர் பதவியின் வாடையை கூட நுகர முடியாதவாறு இறைவன் இழிவை தந்தான்.

120 கோடி மக்களின் பிரதமராக நரேந்திர மோடிக்கு பதவியை கொடுத்து இழிவை தந்து கொண்டிருக்கிறான்.

எந்த அளவுக்கு என்றால் உலகிலேயே நம்பர் 1 முட்டாள் பிரதமர் நரேந்திர மோடி என்று கூறும் அளவிற்கு இழிவை தந்தான். சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சிக்கக்கூடிய நபராக நான் இருக்கிறேன் என்று மோடியின் நாவினாலேயே சொல்ல வைத்து இழிவை தந்தான்.

இப்போது உலகின் அசைக்க முடியாத வல்லாதிக்கம் நிறைந்த வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்பை காமெடி பீஸாக உலகம் முழுவதும் விமர்சிக்க தொடங்கி விட்டனர்.

அமெரிக்காவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இருந்த நட்புறவில் சவூதி அரேபியாவின் மன்னராக சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஓரளவு விரிசல் ஏற்பட்டது.

டொனால்ட் டிரம்பினால் மேலும் விரிசல் ஏற்படும் என்று மத்திய கிழக்கின் ஊடகங்கள் கூறுகிறது.

எது எப்படியோ இனி உலகம் பல விசயங்களை பார்க்க போகிறது.

அவர்கள் பெரும் சூழ்ச்சி செய்தனர். அவர்கள் அறியாதவாறு நாமும் பெரும் சூழ்ச்சி செய்தோம் (திருக்குர்ஆன் 27:50)


அமெரிக்காவில் இடம்பெற்ற 45 ஆவது ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற ஹிலாரி கிளின்டன் தேர்தலில் தோல்வியடைந்துள்ளமை அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் 5 கோடியே 99 இலட்சத்து 26 ஆயிரத்து 386 வாக்குகளை பெற்று 47.7 வீதத்தில் 232 தேர்தல் வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, ஹிலாரி கிளின்டனை எதிர்த்து குடியரசுக் கட்சியின் சார்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 5 கோடியே 96 இலட்சத்து 98 ஆயிரத்து 506 வாக்குகளை பெற்று 47.5 வீதத்தில் 290 தேர்தல் வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த தேர்தலில் ஹிலாரி கிளின்டன், டொனால்ட் டிரம்பினை விட 2 இலட்சத்து  27 ஆயிரத்து 880 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தாலும் தேர்தல் வாக்குகளில் டிரம்பினை விட குறைவாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

10 comments:

  1. சமூகவலைதளங்கள் யாரைத்தான் விமர்சிக்கவில்லை.சமூகவலைதளங்களில் தற்போது மோடி பாராட்டப்படுகிறாரே.இந்தியாவின் மூலைமுடக்கில் உள்ள இந்துகளுக்கு எதிரான செய்திகளை வெளியிடும்ம் நீங்கள் இந்தியாவில் தற்போது இடம்பெறும் 500ரூ,1000ரூ தடை குறித்தும் பேசலாமே நடுநிலை ஊடமே!!ஹீ

    ReplyDelete
  2. JR ex president foresàw these sort of anomalies in election system. Thats the reason he introduced PR system.

    ReplyDelete
  3. 500=1000= விடயம் சந்தி சிரிக்குது ...

    ReplyDelete
  4. முட்டாள்தனமான கட்டுரை!
    இல்லாவிட்டால், காமெடிக்காக எழுதியதாக்கும்.

    ReplyDelete
  5. நீங்களே எழுதி நீங்களே சிரித்துக்கொள்ள வேண்டியதுதான். வேறு என்ன செய்ய முடியம்?.

    ReplyDelete
  6. அமெரிக்காவின் தேர்தல் முறை அப்படி..இதைப் போன்ற ஒரு நிலைதான் 2000 ஆம் ஆண்டு ஏற்பட்டது.புஷை விட அல்கோர் 5 இலட்சம் வாக்குகள் அதிகமாய்ப் பெற்றும் தோல்வியைத் தழுவினார்..ப்ளொரிடாவில் வெறும் 543 வாக்குகளால் ப்ய்ஷ் வெல்ல 26 உறுப்பினர்கள் மேலதிகமாய் கிடைத்தார்கள்..அமெரிக்காவைப் புரிந்து கொள்ளுங்கள்..கண் மூடிய பக்தன் மாதிரி செய்திகளைப் போட வேண்டாம்..தினமலர் போலாகிவிட்டது உங்க வெப்சைட்

    ReplyDelete
  7. ஹா ஹா ஹா 😃😃😃😃😃😁😁😁😁😁😆😆😆

    ReplyDelete
  8. Kumar & Ajan தாங்கள் இருவரும் சற்று உலக அறிவினை கூட்டிக் கொள்ள வேண்டும். அதற்கு jvp,tamilwin,tamil mirror,virekesary online போன்ற சிறு பிள்ளை ஊடகங்களை பார்த்து கதை சொல்வதை விட்டு விட்டு CNN ,BBC,Al Jazeera, போன்ற சர்வதேச ஊடகங்கள் அல்லது Colombo telegram போன்ற உள்நாட்டு ஊடகங்களை பார்க்க வேண்டும்.

    அவ்வாறு வெளி உலகை எட்டிப்பார்த்தால் புரியும் மேல் உள்ள கட்டுரையின் எதார்த்தம்.

    மோடி ஒரு முட்டாள் என இந்திய ஊடகங்களில் மட்டும் அல்ல, பிரித்தானிய ஊடகங்களில் கூட விபரிக்கப் பட்டிருந்தார். மேலும் பிரபலம் தேவை என்பத்துக்காய் காமெராவினையே எப்போதும் நோக்குபவர் என்று பல கார்ட்டூன்களும் ,பிரபல ஊடகங்களில் வெளி வந்திருந்தமை இங்கு குறிப்பிடப் படவேண்டிய விடயம்.

    மேலும் பண விடயம், இந்தியாவில் உள்ள 500/1000 தாள்களின் மொத்த பெறுமதி ஆனது இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தின் 15/80 மடங்காகும். இந்திய மக்கள் 120 கோடி பெரும் கூட 500/1000 தாள்கள் பாவிக்கிறார்கள். அனைதையும் பார்க்கும் போது மோடியால் ஆகாக் கூடியது 3% தொடக்கம் 4.35% வரையே கருப்பு பணத்தை தடை செய்திருக்க முடியும். மக்களை பெரும் துயருக்கு உட்படுத்தி விட்டு இந்த அடைவை அடைவது கேவலமானது. கருப்பு பணம் 98% வீதமானது வெளிநாட்டில் தான் இருக்கும் என்பது கூட அறியாத அறிய முடியாத முடடாள் பிரதமர் மோடி.

    அடுத்து ட்ரம்ப் ,இவர் ஒரு ஜோக்கர் என்று அமெரிக்கர்கள் கூறி விட்டனர். இதை விட என்ன? இந்த நிமிடம் வரை போராடடம் தொடர்கிறது. மேலும் அமெரிக்காவில் பிளவுகள் ஏற்படத் தொடக்கி உள்ளதாக அந்நாடு சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்வரும் டிசம்பர் 11 இல் நடைபெறவுள்ள Electro Candidate இந்த வாக்களிப்பின் போது ஹிலாரியை தெரிவு செய்யுமாறு பல அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

    சற்று உலக அறிவை பெற்று விட்டு பிண்ணுடல் விடுமாறு வேண்டிக் கொள்கிறேன் ,

    ReplyDelete
  9. I, of course, like to check the comments as they carry more insight than the article alone, most of the times. In my opinion a comment should be brief to the point and not like an essay, however, Mohamed Zafnas inspired me to continue reading until the end.

    Wow, Mohamed Zafnas, Zafar Ahamed- quite unbelievable- well, not for attacking Kumar and Raj, really. But the insights shared in the comment were profound. Glad to see the younger generation insightful.

    That's right- Electoral College is something nobody is talking about. Donald will very likely be the president though.

    ReplyDelete
  10. Jazakallahu hiren Mr. Hameem Mohamed.

    ReplyDelete

Powered by Blogger.