சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 'மாணிக்கம் ராணி' நாடு திரும்பினார்
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கைப் பணிப் பெண் ஒருவர் நேற்று (16) நாடு திரும்பியுள்ளார்.
கலேவெலயைச் சேர்ந்த மாணிக்கம் ராணி என்ற 29 வயதான பெண்ணே இவ்வாறு நாடு திரும்பியுள்ளார்.
9 மாதக் குழந்தை ஒன்றின் மரணம் தொடர்பில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி இந்த பணிப்பெண்ணின் பாதுகாப்பில் இருந்த 9 மாதக் குழந்தை உயிரிழந்தது.
இதனை அடுத்து அவருக்கு 10 ஆண்டு காலம் சிறை தண்டனையுடன், மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
எனினும் மேன்முறையீட்டை அடுத்து அவருக்கான தண்டனை ஒன்றரையாண்டு சிறைவாசமாக குறைக்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ளார்.
இச்செய்தி உண்மைக்குப் புறம்பானது
ReplyDeleteகாரணம் இவ்வழக்கில் ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம் சார்பாக ஆஜரானவரிடம் நேரிடயாக நான் அறிந்த செய்தி
அடிப்படையில் இவ்வழக்கு நீதிமன்றுக்கே கொண்டு செல்லப்பட வில்லை
மாறாக இறந்த குழந்தையின் பெற்றோர் தான் இவ்வழக்கு கொலை என்பதாக வழக்கு பதிந்தனர் ஆனால் கொலை என்பதற்கு தகுந்த ஆதாரம் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது
எவ்வாறு விடுதலையானார் என்பதை முழு விபரமும் தாருங்கள்.
ReplyDelete