தொழுகைக்கு அழைப்பு விடுப்பது, சிறப்புவாய்ந்த பணி - குவைத் தூதுவர் காந்தீபன் பாலசுப்ரமணியம்
இஸ்லாம் அழைப்பு மையம் (IPC) நிறுவனத்தால் ரமழான் மாதத்தில் நடாத்தப்பட்ட "அதான் " போட்டிக்கான பரிசளிப்பு விழா இன்று (10-Nov ) குவைத் பெரிய பள்ளி வாசலில் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது .இப்போட்டி நிகழ்ச்சி வயதெல்லை யின் அடிப்படையில் 4 பிரிவுகளைக் கொண்டிருந்தது
குவைத் இலங்கை தூதுவர் காந்தீபன் பாலசுப்ரமணியம் அவர்கள் விஷேட அதிதியாக கலந்து கொண்டார்கள் .அத்துடன் IPC நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உட்பட இன்னும் பல பிரமுகர்களும் பெற்றோர்களும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர் .
முஸ்லிம்களது ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் "அதான் " கூற கற்றுக்கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததொரு பணி என்றும் முஸ்லிம்களது கலாச்சாரம் , பாரம்பரியம் ஒழுக்க விழுமியங்கள் போன்றவற்றை சிறு வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு பழக்குவதனூடாக சிறந்ததொரு சமூகத்தை கட்டி எழுப்ப முடியும் எனவும் தூதுவரது உரையில் குறிப்பிட்டுக் காட்டினார் .
பங்கு பற்றிய அனைவருக்கும் பரிசில்கள் ,சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
இஸ்லாம் அழைப்பு மையத்தின் அழைப்பாளர் மதிப்பிற்குறிய பைஸல் (நஜாஹி ) அவர்கள் இந்நிகழ்ச்சியை முன்னின்று நடாத்தி வைத்தார்கள்.
Post a Comment