ஜனாதிபதித் தேர்தலில் ரணிலை, தோற்கடிக்கத் தகுதியானவர் மைத்திரியே - டிலான்
2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் மைத்திரிபால சிறிசேனவை போட்டியிட வைக்கும் நோக்கில், அவரது விருப்பத்தை பெற்றுக்கொள்ள திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு பல முறை கோரிய போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு இணங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், எப்படியாவது ஜனாதிபதியை மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இணங்க வைக்க வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாகவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவை தோற்கடிக்க கூடிய தகுதியான நபர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதற்கு இன்னும் பல வருடங்கள் இருக்கின்றன. அது வரைக்கும் இந்த நல்லட்சியை வைத்திருக்க முடியாது.
ReplyDeleteவயதில் குறைந்ததும் நல்ல கல்வி தகைமையும் உள்ள ஒரு நடுத்தர வயது தலைவரை அடுத்த முறை தெரிவு செய்யப்படல் வேண்டும்.மைத்திரி நல்லவரு தான் சும்மா கதிரையில் வைத்துக்கொண்டு இருப்பதில் இந்தவிதமான பிரயோசனமுமில்லை,இவர் வந்து ஒரு அபிவிருத்தியையும் காணோம் சும்மா ரெண்டு வருஷம் கடத்தினது தான் மிச்சம்.
ReplyDeleteRANIL WICKRAMASINGHA Kalakepakireema nisai ada maitree janadipati wela inneth.ema nisai oya dodawana wachala dilan perera janatawa visin paraddala elewwath maitreegen oya mantree kamath ematikamath lebune.GUNAMAKU KATHA kiyawanda epa.den mahindage weradi kiyana tamuse maitreetah baninne oya widihata tama.maitreeta balaya netiuna kaleka.tamuse number 1 gunamakuwek.
ReplyDeleteஇந்த ஆசாமி லோக ஹோராவின் வரிசையில் முதல் தரத்தில் உள்ளார். வெளிநாட்டுப் பணியகத்திலிருந்த அடித்த கோடான கோடி ரூபாக்களுக்கு விசாரணையும் இல்லை. அது பற்றி அவ்வப் போது அந்த அமைச்சுக்கு இப்போது பொறுப்பாக உள்ள அமைச்சர் இரகசியங்களை அவ்வப்போது கொண்டுவர முனைந்தார். ஆனால் அது யாருடைய காதிலும் விழவில்லை.அந்த இறுமாப்பில் பெரும் பெரும் கருத்துக்களை ஜவான் மாதிரி பாய்ந்து பாய்ந்து குழைக்கின்றார். இறுதியில் அவர்கள் அனைவரும் மேல் நாடு கீழ்.
ReplyDelete