Header Ads



பேருவளை பிரச்சினையின் பின்னணியில் நாம் இல்லை - தவறுகளை திருத்த, சந்தர்ப்பம் வழங்குங்கள் - பசில்

கடந்த ஆட்சியில் தவறு இழைத்ததன் காரணமாகவே மக்கள் எங்களை நிராகரித்தார்கள் என்பதனை நாம் ஏற்றுக் கொள்கின்றோம் இருந்தாலும் தவறுகளை திருத்திக் கொள்ள எங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குங்கள் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ நேற்றுத் கேட்டுக்​ெகாண்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு நானே காரணம் என ஆளும் தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டினை முழு மனத்துடன் ஏற்றுக்ெகாள்வதாகவும் இதற்காக பிறர் மீது பலி சுமத்த விரும்பவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருக்கும்வரை அவருக்கு பக்கப்பலமாக அரசியலில் இருப்பேனே தவிர பதவி பெற்றுக்ெகாள்வதற்காக எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லையென்றும் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தக் கட்சியுடன் நேரடித் தொடர்பு இல்லாதபோதும் அவரை நினைவுகூர்ந்தே நாம் இதனை முன்னெடுத்துச் செல்வோம்

என்பதில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும் அவர் உறுதியாக தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது செய்தியாளர் மாநாடு பத்தரமுல்லையிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

லங்கா சுதந்திரக் கட்சியை நாம் பிரிக்கவில்லை. தேசிய அரசாங்கம் எனும் போர்வையில் ல.சு.க ஆதரவாளர்கள் கைவிடப்பட்டுள்ளார்கள். மக்களுக்கு நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்துள்ளது. அவர்களின் பயத்தை களையும் நோக்கிலேயே நாம் இந்தக் கட்சியை ஆரம்பித்துள்ளோமே தவிர ல.சு.கவிற்கு எதிராக செயற்படுவதற்காக அல்ல. எமது கட்சி லசு.க எனும் நெல் மணியிலிருந்து புதிதாக முளைவிட்ட நாற்று மாத்திரமே. ல.சு.கவின் கொள்கைகளில் காலத்துக்கு காலம் தலைவர்கள் மக்கள் நலன்கருதி சிறிய மாற்றங்களை செய்திருந்தனர்.

அதே வகையில் நாமும் ஒருசில சிறிய மாற்றங்களுடன் கட்சிக் கொள்கைகளைப் பின்பற்றுவோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் 58 இலட்சம் வாக்குகள் எமக்கு கிடைத்திருந்தன. தற்போது இவ்எண்ணிக்கை 78 இலட்சத்திலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கூட்டுறவுச் சங்க தேர்தலில்கூட அமோக வெற்றுயீட்டும் நிலையை நாம் அடைந்துள்ளோம் என்றும் பசில் ராஜபக்ஷ் நம்பிக்கை தெரிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்சியின் தவிசாளர் பதவியை ஏற்றுக்ெகாள்வாரென தான் நம்புவதாகவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

1951 ஆம் ஆண்டு மறைந்த பண்டாரநாயக்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ல.சு.க வின் பிரதான நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கிலேயே எமது புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணையாளரினால் அங்கீகாரம் வழங்கப்பட்ட நாள் முதல் எமது கட்சி இயங்க ஆரம்பித்துள்ளது.

அதன் முதலாவது அங்கத்துவத்தை நான் பெற்றுக் கொண்டேன். தற்போது ஏனையோர்கும் அங்கத்துவம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் கிளைகளை ஆரம்பிப்போம். இளை ஞர்கள் பெண்களுக்கு சங்கங்களை அமைப்போம் பின்னர் அதிகாரிகளை நியமிப்போம் "என்றும் தெரிவித்தார்.

"2005 தேர்தலின் வெற்றிக்குப் பின்னால் நான் இருந்தேன். ஆனால் அதற்காக நான் பெருமை தேடிக்ெகாள்ளவில்லை. அதேபோன்று தோல்விக்கான காரணத்தையும் நான் ஏற்றுக்ெகாள்கிறேன்.

அதுவே பண்பாக இருக்குமென்று நான் நினைக்கிறேன். மஹிந்த ராஜபக்க்ஷ யுத்தம் செய்யாது பிரபாகரனுடன் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முற்பட்டார். ஆனால் அது முடியாமல்போனது. எனவே தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்டுவதற்கு எமது கட்சி ஏற்பாடு செய்யும்.

அதேபோன்று பேருவளை பிரச்சினையின் பின்னணியிலும் நாம் இருக்கவில்லை. இந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களே இருந்தனர்" என்றும் கூறினார்.

9 comments:

  1. Hello Basil

    Today people are highly educated.

    You can't fool them.

    ReplyDelete
  2. Sinhalise are foolish whatever they're saying they vl trust them

    ReplyDelete
  3. Nalla solli vote yaduthu parliment pooy piraho thaan ungata singa mohatha kaattuviyal mr basil. Edu anupavam

    ReplyDelete
  4. Best comedy of the year..... Haaaaaa...........ha.........

    ReplyDelete
  5. Basil , you took more than ten years to let down Muslims !
    We know more politics than you Basil ! Unless this govt
    breach the trust of Muslims , you have no chance of
    winning Muslims . Your old strategy of speaking different
    things to different communities to keep in shape , won't
    give you any good results . How old are you Basil ? Your
    former champion bro is 71 , the age of correcting
    mistakes or committing more ??? The only mistake you all
    must correct is , your thinking that this country can not
    go without you !!!!!!!!!!!!!!

    ReplyDelete
  6. அய்யோ பாவம்

    ReplyDelete
  7. BALU WALIGE KELIN KARANDA BEHA. TAMUSELA HEDENA JATHIYAK NOWE.AYE AWASTAWA ILLANNE DEMALA MUSLIM MARANNADA?

    ReplyDelete

Powered by Blogger.