அன்பின் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களுக்கு..!
-ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-
அன்பின் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,
இலங்கை இஸ்லாமிய தஃவாக்களத்தில் உங்களிற்கென தனியான ஒரு இடத்தை நீங்கள் அடைந்துள்ளீர்கள், உங்களுடைய தீவிரமான சீர்திருத்தப் பணிகள் குறித்து பலரும் பல்வேறு கோணங்களில் விமர்சிப்பதனை நீங்கள் அறிவீர்கள், பொதுவாக குறைகளையே பேசி நிறைகளை மறந்துவிடுகின்ற ஒரு சமூகக் கட்டமைப்பில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அதனால் நாங்கள் ஒருவரை மற்றவர் மதிப்பதும் அங்கீகரிப்பதும் இல்லை, இணைக்கப் பாடுகளிற்குப் பதிலாக முரண்பாடுகளையே உள்வீட்டில் இஸ்லாத்தின் பெயரால் வளர்த்துக் கொண்டிருக்கின்றோம், குறிப்பாக எனது நிலைப்பாடுகளையும் அறிவீர்கள் எனவே அவை பற்றி இங்கே நான் பேசுவதற்கில்லை.
இஸ்லாமிய தஃவா களத்தைப் பொறுத்தவரை இலங்கையில் கருத்துவேறுபாடுகள் அணுகுமுறை வேறுபாடுகள் இருக்கின்றமை எல்லோரும் அறிந்த விடயமாகும், என்றாலும் சமூகத்தின் இருப்பு பாதுகாப்பு, உரிமைகள் என்று வருகின்ற பொழுது வேறுபாடுகளிற்கு மத்தியிலும் எமக்குள் ஒரு புரிந்துணர்வும் இணைக்கப் பாடும் இருத்தல் வேண்டும் என்பது எல்லோராலும் புரிந்து கொள்ள முடியுமான எளிமையான உண்மையாகும்.
குறிப்பாக போருக்கு பின்னரான இலங்கையில் ஹலால் முதல் அளுத்கமை வரை சமூகம் எதிர்கொண்ட தென்னிலங்கை காழ்ப்ப்புணர்வு பிரச்சாரங்கள் வன்முறைகள் என்பவற்றிற்குப் பின்னால் இருந்த அரசியல் இராஜ தந்திர பின்புலங்கள் அவற்றின் பல்வகை பரிமாணங்கள் என்பவற்றை கருத்தில் கொண்டு சமூகத் தலைமைகளை ஒன்றுகூட்ட பல்வேறு முயற்சிகள் எடுக்கப் பட்டன, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, இலங்கை முஸ்லிம் கவுன்ஸில் ஆகியவற்றோடு தேசிய ஷூரா சபையும் பல்வேறு சிவில் சமூக முன்னெடுப்புக்களை மேற்கொண்டன.
தேசிய ஷூரா சபையின் உருவாக்கத்தில் இணைந்து கொள்ளுமாறு உங்களிற்கு அழைப்பு விடுக்கப் பட்ட பொழுது திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்ததோடு அதனை காரசாரமாக விமர்சித்தீர்கள், குறிப்பாக ஏக காலத்தில் பொதுபலசேனா என்னை இலக்கு வைத்து விமர்சித்த பொழுது நீங்களும் என்னையும் மற்றும் ஒருசில பிரபலங்களையும் பொதுக் கூட்டங்களில் விமர்சித்தீர்கள், தூற்றினீர்கள், காணொளிகள் இன்னும் வலைதளங்களில் இருக்கின்றன.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசோ அல்லது பிறநாட்டு சக்திகளோ கைவைப்பதில் சமூகத்தின் எந்தத் தலைமைக்கும் உடன் பாடுகள் இல்லை என்பதனை நீங்கள் அறிவீர்கள், தேசிய ஷூரா சபை, ஜம்மிய்யத்துல் உலமா, முஸ்லிம் கவுன்ஸில் உற்பட ஏனைய எல்லா இஸ்லாமிய அமைப்புக்களும் அதே நிலைப்பாட்டில் இருந்தாலும் ஷரஆ சட்டங்களோடு முரண்படுகின்ற விடயங்கள், காதி நீதிமன்ற கட்டமைப்பு, நீதிபதிகளின் தகைமைகள், இஸ்லாத்திற்கு முரணான வழக்காறுகள், அநீதிகள் இடம் பெற முடியுமான ஓட்டைகள் என்பவை மீள்பரிசீலனை செய்யப் படுவதனை எல்லோரும் ஏற்றுக் கொண்டு உள்ளக கலந்துரையாடல்களை தீவிரப் படுத்தியுள்ளார்கள். நீங்களும் அதே நிலைப்பாடுகளை கொண்டிருக்கின்றீர்கள் மாத்திரமன்றி உங்கள் முன்மொழிவுகளையும் தயாரித்துள்ளீர்கள்.
இவ்வாறு எல்லோரும் உடன்படுகின்ற ஒரு விடயத்தில் நீங்கள் இன்னும் கொஞ்சம் நிதானமாக செயற்பட்டிருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு, ஜனாநாயக வழிப் போராட்டம் செய்யும் உரிமை இருக்கின்றது, மறுப்பதற்கில்லை அவை மேற்கொள்ளப் படவும் வேண்டும், அதற்கு முன்னர் குறிப்பிட்ட விடயத்தில் சிறுபான்மை சமூகமான எங்கள் அரசியல் சிவில் சன்மார்கத் தலைமைகள் என்ன நிலைப்பாடுகளில் இருக்கின்றார்கள், குறிப்பாக அரசியல் தலைமைகள் எவற்றை எவ்வாறு எப்போது செய்திருக்க வேண்டும் அல்லது செய்ய வேண்டும் என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளவோ ஆல்லது குறிப்பிட்ட தரப்புகளுடன் ஆலோசிக்கவோ முனையாமை மிகப் பெரிய தவறாகவே எனக்குத் தெரிகின்றது.
முந்திக் கொண்டு ஆர்பாட்டம் நீங்கள் செய்தீர்கள், அதற்கான உங்கள் தரப்பு நியாயங்களையும் முன்வைத்துள்ளீர்கள் என்றாலும் ஆக்ரோஷமான உங்கள் பேச்சுக்கள், வார்த்தைப் பிரயோகங்கள், குறுகிய மற்றும் நீண்டகால எதிர்வினைகளை, பின்விளைவுகளை வன்முறைகளை வரவழைப்பது போன்று அமைந்திருந்தமை தான் என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் பெரிதும் கவலை கொள்ளச் செய்தது. முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு இது தான் என சற்று உரத்த தொனியில் அழகிய வார்த்தைப் பிரயோகங்களில் சுருக்கமாக அழகாக நீங்கள் பேசியிருக்க வேண்டும்.
உங்களை சமூகத் தலைமைகள் நேரடியாக வந்து சந்தித்து கலந்துரையாடிய பொழுதும் நீங்கள் கிழக்கில் மற்றுமொரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளீர்கள், அதையும் கண்ணுற்றதன் பின்னரே நான் இந்த வரிகளை எழுத உத்தேசித்தேன்.
அன்பின் சகோதரர்களே, கோளாறு எங்கு இருக்கின்றது என்பதனை நாம் பார்க்க வேண்டும், ஹலால் முதல் அளுத்கமை வரை எமது சமூகம் எதிர்கொண்ட அத்தனை சவால்களிற்குப் பின்னாலும் அரசியல் இராஜதந்திர பின்புலங்கள் இருந்த நிலையிலும் எமது அரசியல் தலைமைகள் சராணாகதி நிலையில் இருந்தார்கள், இப்பொழுதும் அமைச்சரவை தீர்மாணம் அறிவிக்கப் படும் வரை அவர்கள் அமைதியாக இருந்திருக்கின்றார்கள், இன்று அவர்கள் செய்ய வேண்டிய வேலையை தான் சிவில் சன்மார்க்கத் தலைமைகள் செய்து கொண்டிருக்கின்றன.
இவ்வாறான நிலையில் அவசரப்பட்டு தேசிய அரசையோ, ஏனைய பெரும்பான்மை இனவாத சக்திகளையோ, சர்வதேச சமூகத்தையோ, குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் ஏனைய அங்கங்களையோ நாம் முரண்பாட்டிற்குள் இழுத்துப் போட்டுக் கொள்வது சமயோசிதமான சாணக்கியமான அறிவுபூர்வமான நடவடிக்கையாக நான் கருதவில்லை.
நீங்கள் தேசிய அரங்கிலோ, சமூகத் தளத்திலோ தனிமைப் படுவதனையோ, தனிமைப் படுத்தப் படுவதனையோ தனிப்பட்ட முறையில் நான் விரும்பவில்லை, முஸ்லிம் அரசியல் சிவில் சன்மார்கத் தலைமைகளுடன் இணைந்து செயற்பட முடியாவிட்டாலும், புரிந்துணர்வுடன் செயற்பட முன்வரமாறு உங்களை அன்போடு வேண்டிக் கொள்கின்றேன், அதற்கான அழுத்தத்தை வழிகாட்டளை வழங்குமாறு அதன் மூத்த இளம் உறுப்பினர்களையும் சமூகத்தின் ஏனைய அங்கங்களையும் வேண்டிக் கொள்கின்றோம்.
Why is it so hard for people to come to a common ground and listen to Ulema's like this?
ReplyDeleteWonderful article Plz SLTJ do considering we are support to u we want to be together.
ReplyDeleteSLTJ Must act alone as SLTJ has a clear face and purity always...
ReplyDeleteNo one talk this much about this topic hardly until SLTJ did in colombo.... The message gone to the government deeply after the SLTJ's Shriek (Aarppaattam)...
Kindly note that now only our heads (for name) & government side took the file on top...Childish...??
ReplyDeleteYou should understand first the problem is not the protest. We should protest in a decent menner in order to get our rights. But it should not in the way of how the non-Muslims followed(legacy). We have to make a new trend of protest evidenced by Quran and sunnah.
Thus, we should not represent any groups while protesting for our community based problem. Because it might be neglected. So, we should unite each and every Muslims in order to fight against injustice.
So, there is no use to blame why they protested (SLTJ). But we should be aware in the future to wake up & unite everyone to fight against injustice.
Past is past. Leave the nonsense what the SLTJ done and welcome to unite everyone under Quran and sunnah to fight or protest in a decent menner against Injustice.
We are Muslims. We should not behave like stupidest. So, do not blame the protest but show them what the errornious have done while the protest by SLTJ or others.
And SLTJ and other groups, you are kindly requested to DESTROY your groups and welcomed to unite as Muslims under Quran and sunnah then you continue as its is how you did your social services. Don't use Islam to your hypocrites.
Your people's have any answer? In which groups prophet Jesus will join when he comes to rule the world in the future? So why this groups cheating the innocent people's.
I pray for Allah to destroy every groups in order to unite them under Quran and sunnah As Muslims.
Allah Kareem.
Dear Masihudeen, I accept your opinion. at the same time you should realize this fact that, if we being just talk about this issue in the limited muslim media, then how it will reach to the government. To show our oppose and opinion, we should gather and expose our opinion to the government. If we are just being quiet and not react as our politicians are doing, then who will solve this issue? We did not react during HALAL issue, then what was happened, we lost that rights. Are You asking us to lose our every rights in the same manner?
ReplyDeleteசாதாரமாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புத்திமதியான கட்டுரை அல்ல மிகவும் பொருத்தமான புத்திமதிகள் கூறப்பட்டுள்ளது.بارك الله فيك الشيخ مشيح الدينز جزاك الله خير
ReplyDeleteசாதாரமாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புத்திமதியான கட்டுரை அல்ல மிகவும் பொருத்தமான புத்திமதிகள் கூறப்பட்டுள்ளது.بارك الله فيك الشيخ مشيح الدين جزاك الله خير
ReplyDeleteVery good opinion.pls this is what fact dears.
ReplyDeleteIt is indeed a nice article but whatever we write, the SLTJ won't accept it. They are guided by the enemies of Islam and Muslims.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇவர்களின் போக்கு தனி போக்கு. இவர்கள் யாரையும் மதிக்க மாட்டார்கள். இவர்களின் பின்னாலுள்ளவர்கள் என்றாவது ஒருநாள் இதை புரிந்து கொள்வார்கள்.
ReplyDeleteFirst only one TJ, now divided into as SLTJ, ACTJ. in future they'll create lot of TJs. Behind the scenes Jews are working.
DeleteFirst only one TJ, now divided into as SLTJ, ACTJ. in future they'll create lot of TJs. Behind the scenes Jews are working.
DeleteDear brother Inaamulla! You are the brother in law of the beloved Minister Rauf Hakeem. I wonder why all this issue was not addressed when he was the Minister of Justice. You could have wrote an article to Rauf Hakeem when he was the justice Minister. We would have respected you then.
ReplyDeleteIsn't it so funny, you are writing to SLTJ?
எல்லா விடயங்களிலும் ஸஹூஹ் பேசும் இவர்களுக்கு இந்த விஷயத்தில் மாத்திரம் நபி வழி கிடைக்கவில்லை போலும். அரசியலில் முழுமையாக ஈடுபட விருமபினால் ஏனைய முஸ்லிம் காட்சிகளைப் போல் ஈடுபடலாமே.அதற்காக முஸ்லிம்களை பிளவுபட்டுத்த வேண்டாம். Our only leadership is acju.
ReplyDeletePeyar eduppazukku naan thaan muzalla kattthiyazu
ReplyDeleteSLTJ yinarhale neengal konjam amaidiyaha irundaal podum
ReplyDeleteபௌத்த மக்கள் மத்தியில் பொதுபலசேனாவுக்கு என்ன மதிப்பிருக்கிறதோ அதுபோல்த்தான் இஸ்லாமியர்கள் மத்தியில் இந்த SLTJ காரர்களுக்கும்....! நன்றாக சிந்தித்தால் புரியும்!
ReplyDeleteஷபாஷ்! சகோஇனாமுல்லா
ReplyDeleteசில கேள்விகள் இயல்பிலேயே எமது மனங்களில் எழுகிறது, அதற்கு பதில் தர வேண்டிய தார்மீகப் பொருப்பு கட்டுரையாளரிற்கு உண்டு!
அ இ ஜ உ இருக்கையில் தேசிய சூரா சபை அமைக்கப்பட தேவை என்ன?
2 மக்களை நெறிப்படுத் எந்த அமைப்பிற்கு அதிக கடப்பாடு உள்ளது?
3 ஒரு தேசிய பிரச்சினை ஏற்படும்போது அ இ ஜ உ உம் சூறா சபையும் கையாளும் விதம் யாது ? அதாவது வேறு வேறாக ஆலோசனை செய்து பின்னர் ஒருவர் பத்வாவை மற்றவர் பருசீலனை பண்ணுவீர்களா?
4 மக்களை சென்றடையக்கூடிய செயற்பாடுகள் இல்லாமைக்கென்ன காரணம்?
5.ஸ்ரீ ல த ஜ வை ப்பொருத்தவரை அவர்கள்
வஹியை மட்டும் பிரச்சாரம் செய்தல் " என்ற அடிப்படையில் இயங்குபவர்களாஐ சொல்லிக்கொள்கிறார்கள்!
மற்ற சபைகளில் அப்படி ஒரு கொள்கையுடையவர்கள் இல்லாமல் பல்வேறு கொள்கையுடையோர் இருப்பதால் முடிவுகள் அகிதாவின் வரம்புகளிற்குள் அமைய உள்ளதா?
6. குறிப்பிட்ட ஆர்பாடத்தின் முன்னரோ, அதன் பின்னரோ சிங்கள இனவாதியால் அல்லாஹ்வை தரக்குறைவாய் பேசிய போதோ!, அமன் முன்னர் சாகல அமைச்சர் நடத்திய பத்திரிகை சந்தின்போதா7 கருத்தூட்டலின்போதோ ஒரு அறிக்கைவது விடாது
ஸ்ரீ ல த ஜ இற்கு எதிர் அறிக்கை வுடுவதுவசரியா
Super. But l don't think so.that they will accept ur opinion or Request.
ReplyDeleteஇங்கு ஒரு விடயத்தை கூற விரும்புகிறேன்.யாழ்ப்பாணத்திலும்.ஒருவர் வந்தார் புரட்சிகரமான புதிய வழியில் இஸ்லாத்தை பரப்பவென.சமூகத்தில் கடைசியில் குரேதம் தான் பரவியத தவிர மார்க்கமல்ல கடைசியில் ஐந்து உயிர்களை காவு கொண்டு சமூகத்தை இரண்டாக்கி. ஒரு தாய் வயிற்றில் பிரந்ததையும் இரண்டாக்கி.அமைதியற்ற நிலையில் அடஙஅடங்து.அவர் ஆரம்பித்து வைத்தார் .அதை புலிகள் முடித்து வைத்தார்கள். ஆடிய நாடகம அழங்கேரலமாமாக கண்ணீருடன் தெரண்னூரில் முடிந்தது.முடிந்தது அன்ரு அந்த புரட்சித்தலைவருடன் யாரும் இன்று அவருடன் இல்லை.இன்று இது வரலாறு.
ReplyDeleteHaha... Jaffna Muslim is very interesting and it is interesting to know brother Maseehuddin is an in law of Rauf Hakeem.
ReplyDeleteWell, it is not fair to blame brother Maishuddin because of Rauf Hakeem. Maybe not everything is in his control and maybe it is not mandatory that he should open his mouth for every situation.
As an Ulema/Scholar, he has a message to the people- they can accept it if that fits right to their intellect or have a second opinion with another Ulema or reject him and do whatever they want and bear the consequences.
சிறுபான்மைக்கான நலவை நாடி செய்யும் சிறுபிள்ளைத்தனமான விடயம் முழு சமூகத்தின் அழிவிற்கும் வழிவகுப்பதாய் அமையக் கூடாது.
ReplyDeleteIt is all Muslims responsibility to handle this issue wisely, because it will create a long term effect on our Muslim society. In my opinion rether we blame each other as a Muslim, we need to come to a common ground what Muslim need not a what a group of of people decided what we do. I understand that some groups wants there own way handling Muslim affairs. It is not acceptable.
ReplyDeleteBefore we decide Muslim affairs at least we need to find out what majority of Muslim need. Unless it effect the entire Muslim society.