பங்குச் சந்தை வீழ்ந்தது, தங்கம் சரிந்தது, நாணய மதிப்பு குறைந்தது
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் முன்னேற்றம் கண்டதை அடுத்து ஆசிய பங்குச் சந்தை பெரும் வீழ்ச்சி கண்டது.
அனைத்து பிராந்திய சந்தைகளிலும் வீழ்ச்சி காணப்பட்டதோடு பாதுகாப்பானதாக பார்க்கப்படும் தங்கம் மற்றும் ஜப்பான் யென் உட்பட நாணய மதிப்பும் சரிவை எதிர்கொண்டுள்ளது.
ஜப்பானின் நிகாய் 225, 5.4 வீதம் வீழ்ச்சி கண்டதோடு உலக அளவிலும் பங்குச் சந்தையில் வீழ்ச்சி காணும் நிலை இருந்தது.
குறிப்பாக வோல் ஸ்டிரீட், டோ ஜோன்ஸ் இண்டஸ்டிரியல் ஆகியவை 400 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்துள்ளது. அதாவது 2 சதவீதம் சரிந்துள்ளது.
500 பங்குகளைக் கொண்ட ‘ஸ்டான்டார் அன்ட் பூர்’ சுமார் 63 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது.
நாஸ்டாக் 100 புள்ளிகளுக்கும் அதிகமான சரிவைக் கண்டுள்ளது.
அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் இலகு வெற்றி பெறுவார் என்று வர்த்தகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
Post a Comment