Header Ads



அவுஸ்திரேலியா செல்லவிருந்த முபீத் - படுகொலை தொடர்பில் வெளியாகும் புதிய தகவல்கள்

அங்­கும்­புர பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கல்­ஹின்ன - பெபி­ல­கொல்ல பள்­ளி­வா­ச­லுக்கு முன்­பாக நேற்று முன்­தினம் காலை மேற்­கொள்­ளப்பட்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்­லப்­பட்­ட­மை­யா­னது தனிப்­பட்ட விவ­காரம் ஒன்று தொடர்பில் வழங்­கப்­பட்ட ஒப்­பந்­ததின் கீழ் புரி­யப்­பட்­டுள்­ள­தாக  விசா­ர­ணை­களில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

மத்­திய மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜய­சிங்­கவின் கீழ் ஆறு சிறப்புக் குழுக்கள் முன்­னெ­டுத்து வரும் விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த விடயம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

நேற்று முன் தினம் காலை­யிலும் மாலை­யி­லு­மாக கைது செய்­யப்­பட்ட 30 வய­து­டைய மஹி­யாவ பகு­தியைச் சேர்ந்த மொஹம்மட் அலி மற்றும் கடு­வலை - ரணால பகு­தியைச் சேர்ந்த இரா­ணு­வத்தில் இருந்து தப்­பி­யோ­டிய 23 வய­தான கனத்த கமகே இந்­துனில் வஜி­ர­கு­மார ஆகி­யோ­ரிடம் முன்­னெ­டுத்த சிறப்பு விசா­ர­ணைகள் ஊடா­கவே இந்த விடயம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்­க­ளிடம் தொடர்ச்­சி­யாக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்பட்டு வரு­வ­தா­கவும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் விடி­வெள்­ளிக்குத் (MFM.Fazeer) தெரி­வித்தார்.

 இந் நிலையில் கைதா­கி­யுள்ள இரு சந்­தேக நபர்­க­ளையும் 48 மணி நேர விஷேட தடுப்புக் காவல் உத்­த­ர­வுக்கு அமைய அங்­கும்­புர பொலிஸ் நிலை­யத்தில் தடுத்து வைத்து மேல­திக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­வ­தா­கவும் அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

நேற்று முன்­தினம்  காலை 8.40 மணி­ய­ளவில் கல்­ஹின்ன -பெபி­ல­கொல்ல பள்­ளி­வா­ச­லுக்கு முன்­பாக உள்ள ஒழுங்கை அருகே பிர­தான பாதையை அண்­மித்து இளை­ஞர்கள் இருவர் உரை­யா­டிக்­கொண்­டி­ருந்­துள்­ளனர்.

இதன் போது பிர­தான பாதை வழியே  301 - 2218 எனும் இலக்­கத்தைக் கொண்ட சிவப்பு நிற கார் ஒன்று வந்­துள்­ளது.

இக்­கா­ரா­னது குறித்த இளை­ஞர்கள் நின்­றி­ருந்த  இடத்தை கடந்து  சென்று, மீண்டும் பின்­னோக்கி வந்­துள்­ள­துடன் அதன் போது அவ்­வி­ளை­ஞர்கள் மீது காருக்குள் இருந்து துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­யப்­பட்­டுள்­ளது.

துப்­பாக்கிப் பிர­யோ­கத்­தை­ய­டுத்து அவ்­வி­ளை­ஞர்­களில் ஒருவர் ஸ்தலத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்­ள­துடன்  மற்­றை­யவர் பொது மக்­க­ளினால் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு செல்­லப்­பட்டார்.

கண்டி வீதி, கல்­ஹின்ன எனும் முக­வ­ரியைச் சேர்ந்த 23 வய­து­டைய மொஹம்மட் ரபீக் மொஹம்மட் முபீத் எனும் இளை­ஞரே சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் காய­ம­டைந்­தவர் 21 வய­து­டைய இளைஞர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரின் அலு­வ­ல­கத்தின் உயர் அதி­காரி ஒருவர்  தெரி­வித்தார்.

காய­ம­டைந்­தவர் பேரா­தனை போதனா வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெறும் நிலையில் அவரின் நிலைமை கவ­லைக்­கி­ட­மாக இல்லை என வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் குறிப்­பிட்டார்.

இந் நிலையில் இந்தச் சம்­பவம் குறித்து பொலிஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ள நிலையில் பல்­வேறு தக­வல்கள் அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

சந்­தேக நபர்கள் கொலை செய்­வ­தற்­காக பய­ணித்த 301 - 2218 எனும் இலக்­கத்தைக் கொண்ட  சிவப்பு நிற காரா­னது கண்டி பூஜா­பிட்­டிய பகு­தியில் கைவி­டப்­பட்­டி­ருந்த நிலையில் மீட்­கப்­பட்ட போதும் அந்தக் காரா­னது கொழும்பு - கந்­தானை பகு­தியில் வாட­கைக்கு பெறப்­பட்­டுள்­ளது என்­பது விசா­ர­ணையில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

குறித்த காரில் கொழும்­பி­லி­ருந்து இருவர் பய­ணித்­துள்­ள­துடன் கண்டி பகு­திக்குள் வைத்து முதலில் கைது செய்­யப்ப்ட்ட 30 வய­தான மொஹம்மட் அலி எனும் சந்­தேக நபர் காரில் ஏறி­யுள்­ளமை விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ளது. காரில் பய­ணித்த ஏனைய இரு­வரில் ஒரு­வரே தற்­போது கைதா­கி­யுள்ள ரணால பகு­தியைச் சேர்ந்த முன்னாள் இரா­ணுவ வீர­ரான  இந்­துனில் வஜிர குமார என பொலிஸார் குறிப்­பிட்­டனர்.

மொஹம்மட் அலி எனும் சந்­தேக நபர் வழி காட்­டி­யாக இக்­கொலைச் சம்பவம் தொடர்பில் செயற்­பட்­டுள்­ள­தாக கண்­ட­றிந்­துள்ள விசா­ர­ணை­யா­ளர்கள் அது தொடர்பில் அவர் 50 ஆயிரம் ரூபா வரையில் பணம் பெற்­றுள்ள தக­வ­லையும் வெளிப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளார்.

உயி­ரி­ழந்த இளைஞர் கல்வி நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த போது நில­விய தனிப்­பட்ட விவ­காரம் ஒன்­றினை மையப்­ப­டுத்தி வெளி நாட்டில் உள்ள நபர் ஒருவர் வழங்­கிய ஒப்­பந்­தத்தின் அடிப்­ப­டையில் பழி தீர்க்க இந்தக் கொலை புரி­யப்­பட்­டுள்­ள­தாக  விசா­ர­ணை­களில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் அவற்றை உறுதி செய்யத் தேவை­யான மேல­திக விசா­ர­ணை­களை  முன்­னெ­டுத்­துள்­ள­தாக பொலிஸ் தக­வல்கள் தெரி­வித்­தன.

முதல் சந்­தேக நப­ராக கைது செய்­யப்­பட்ட நபர் ஆரம்­பத்தில் பொலி­ஸா­ரிடம் ஆயு­தத்­துடன் பொது­மக்­க­ளினால் பிடித்து ஒப்­ப­டைக்­கப்­பட்ட போது, தன்னை துப்­பாக்­கி­தா­ரிகள் கடத்­தி­வந்து தாக்­கு­தலின் பின்னர் ஆயு­தத்­துடன் கபல்­கஸ்­தென்ன பகு­தியில் கைவிட்டு சென்­ற­தாக கூறி­யி­ருந்தார்.

எனினும் குறித்த சந்­தேக நபர் தொலை­பேசி அழைப்­பொன்றின் பிர­கா­ரமே தாக்­கு­தல்­தா­ரி­களின் வழி காட்­டி­யாக அக்­காரில் ஏறி­யுள்­ளமை தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களில் பொலிஸார் தக­வல்­களை வெளிப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளனர்.

கைதா­கி­யுள்ள மற்­றைய சந்­தேக நப­ரான கனத்­த­க­மகே இந்­துனில் வஜிர குமார எனும் முன்னாள் இரா­ணுவ வீரர் பனா­கொட இரா­ணுவ முகாமின் கீழ் இரா­ணுவ சமிக்ஞை பிரிவில் கட­மை­யாற்றும் போது தப்பிச் சென்­றவர் என குறிப்­பிடும் பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை தொடர்­வ­தாக குறிப்­பிட்­டனர்.

பொது மக்­களின் உத­வி­யுடன் முதல் சந்­தேக நபரை பொலிஸார் கைது செய்­துள்­ள­துடன் அவ­ரி­ட­மி­ருந்து துப்­பாக்கிச் சூட்­டுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக நம்­பப்­படும் ரீ 56 ரக துப்­பாக்கி ஒன்­றி­னையும் 20 தோட்­டாக்­க­ளையும் பொலிஸார் மீட்­டி­ருந்­தனர். இந் நிலையில் கொலைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட ஆயுதம் தொடர்பில் உறு­தி­யான முடி­வினைப் பெற மீட்­கப்­பட்ட குறித்த துப்­பாக்­கியை அரச இர­சா­யன பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்த பொலிஸார் நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளனர்.

இந் நிலை­யி­லேயே மத்­திய மாகா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜய­சிங்­கவின் நேரடி கட்­டுப்­பாட்டில் அங்­கும்­புர பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் பாலித்த ஜய­ரத்­னவின் தலை­மையில் குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி எம். பண்­டார உள்­ளிட்ட 6 குழுக்­களின் கீழ் விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.

கல்­ஹின்ன பகு­தியில் கடந்த நாட்­களில் இரு இனங்­க­ளி­டையே இடம்­பெற்ற சில விரும்­பத்­த­காத சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில்  இன­வாத ரீதியில் இந்த துப்­பாக்கிச் சூடு மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக பலத்த சந்­தேகம் நில­வி­யது.

இந் நிலையில் நேற்­றைய தினம் பிர­தே­சத்தின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற ரீதியில் தபால் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் ஹலீம், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்க மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ர­வுடன் சம்­பவம் தொடர்பில் பேச்­சுக்­களை நடத்­தினார்.

இதன் போது பூரண விசா­ரணை நடத்­தப்­படும் என அவ்­வி­ரு­வரும் அமைச்சர் ஹலீ­மிடம் உறு­தி­ய­ளித்­துள்­ளனர். 

இந் நிலையிலேயே விசாரணைகளில் மேலுள்ள தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு இனவாத ரீதியான தாக்குதலாக இச் சம்பவம் இடம்பெறவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. 

இந் நிலையில் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா நேற்று மாலை 4.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவ்விளைஞனின் பெற்றோரையும் அமைச்சர் ஹலீம் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் அங்கத்தவரான உயிரிழந்த இளைஞர் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்துவிட்டு அடுத்த வாரமளவில் அவுஸ்திரேலியா செல்ல தயாராக இருந்துள்ள நிலையிலேயே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த இளைஞரின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று மாலை கல்ஹின்னையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.