செலவு குறைந்த மைத்திரி
கடந்த மூன்று வருடங்களில் இலங்கை வரவு செலவுத்திட்டத்தின் போக்கு குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மூன்றாண்டு காலப்பகுதியில் இரண்டு ஜனாதிபதிக்கு எவ்வாறான நிதி ஒதுக்கம் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து தரவுகள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதிகளின் ஊடாக ஆட்சிக்காக ஒதுக்கிய பணத்தின் பெறுமதி பல பில்லியன்கள் ஆகும்.
அதற்கமைய 2014ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் 2016/2017 ஆண்டு காலப்பகுதியில் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒதுக்கிய பணம் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு அரசாங்கத்தின் செலவு 2025 பில்லியன் என்ற போதிலும், அதில் நூறுக்கு 48 வீதமான மஹிந்த கீழ் செய்யற்பட்ட அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. அதற்கமைய 981 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும் 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணம் 389 பில்லியன் ரூபா மாத்திரமே. அரசாங்க செலவான 3050 பில்லியன் ரூபாவில் இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அது வரவு செலவு திட்டத்தில் 13 வீதம் மாத்திரமே ஆகும்.
அடுத்தாண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த செலவு தொகை 2534 பில்லியன் ரூபாவாகும். இதில் ஜனாதிபதி மைத்திரிக்கு 350 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் பல ஜனாதிபதிகள் வந்து சென்ற போதிலும், சமகால ஜனாதிபதி மிகவும் எளிமையானர் எனவும் ஆடம்பரங்களை விரும்பாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிச்சயமாக
ReplyDeletetrue
ReplyDelete