மகிந்த ராஜபக்ச சீனா செல்ல, சகல ஏற்பாடுகளையும் செய்ய ரணில் உத்தரவு
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சீனப் பயணத்துக்குத் தேவையான ஏற்பாடுகள் மற்றும் வசதிகளைச் செய்து கொடுக்குமாறு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 23ஆம் நாள், சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஒருவார காலப் பயணமாக சீனா செல்லும் அவர், டிசெம்பர் 1ஆம் நாள் வரை பீஜிங்கில் தங்கியிருப்பார். இதன் போது அவர் சீன அரசின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
சீன அரசின் அழைப்பின் பேரில் இடம்பெறும் பயணம் என்பதால், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் என்ற வகையில் தமது பயணத்துக்கான வசதிகள், ஏற்பாடுகளைச் செய்து தருமாறு, சிறிலங்கா பிரதமரிடம் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தக் கோரிக்கையின் அடிப்படையில், மகிந்த ராஜபக்சவின் சீனப் பயணத்துக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
உங்களுக்கு வேலைகள் அதிகம் இருந்தால் நீகளும் ஜனாதிபதியும் கலந்து கொள்ள வேண்டிய அனைத்து விடயங்களுக்கும் இவரையே அனுப்பினால் நல்லலது ஜ நா உட்பட நமக்குள் வேற்றுமை வராமல் இருக்கும்
ReplyDeleteMr. Clean got trapped on the COPE report and now looking for rooms to portrait himself as a good person, so he will go to any extend to provide MR luxury and comfort. In return MR will reciprocate in kindness in the parliament with his group to avert no confidence motion.
ReplyDeleteஇவரை சீனாவிட்கு அனுப்பி விட்டு நாட்டில் பாதுகாப்பை தீவிரமாக பலப்படுத்துங்கள் நாட்டில் இனக்கலவரத்தை அவரும் அவரின் நேசர்களும் திட்டம்மிட்டபடி உண்டுபன்ன அவரின் அல்லகைகளுக்கு ஏவியுள்ளார், அதை கச்சிதமாக அவர் நாட்டில் இல்லாத போது செய்யும்படி அவர்களுக்கு கூறியுள்ளார் அதனால்தான் அவரின் வெளிநாட்டு பயணத்தை நெருக்கி இனவாதம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது
ReplyDelete