கட்டாரிலும் பொருளாதார நெருக்கடி - வீண் செலவை குறைக்குமாறு, கத்தார் அரசு உத்தரவு
உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான கத்தார் வளைகுடா நாட்டின் அரசர் "நுகர்வு கலாச்சாரம்" என்று அவரால் அழைக்கப்படும் சூழ்நிலையை தனது நாடு சமாளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
எண்ணெய் மற்றும் எரிபொருள் வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள பட்ஜெட் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் சூழலில் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தனியின் இந்த அழைப்பு வந்துள்ளது.
ஐந்து வருட பொருளாதார திட்டத்தை நிறுவிய ஷேக் தமிம், வீணாக்குதலும் தேவைக்கு அதிகமான செலவுகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் பிற வளைகுடா நாடுகளை காட்டிலும் கத்தார் சற்று நல்ல முறையில் சமாளித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், அவைகளை போலவே அரசாங்கத்தின் மீதுள்ள நிதிச்சுமையை குறைக்க முயற்சிகளை எடுத்து வருகிறது.
Post a Comment