ஐரோப்பாவை மிரட்டும் ஏர்துகான்
ஐரோப்பிய ஒன்றியம் துருக்கிக்கு மிகவும் நெருக்கடி கொடுத்தால், ஐரோப்பாவுடனான துருக்கியின் எல்லைகளை பல்லாயிரக்கணக்கான குடியேறிகளுக்கு திறந்துவிடப்போவதாக துருக்கி அதிபர் ரெஜீப் தாயிப் எர்துவன் எச்சரித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து அந்நாட்டு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை ` அளவுக்கு அதிகமானது` என்று கூறி துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இணைக்கும் பேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்க ஐரோப்பிய பாராளுமன்றம் ஒரு கட்டுப்படுத்தாத வகையிலான வாக்களித்துள்ள நிலையில் துருக்கி அதிபரின் இந்த எச்சரிக்கை வெளிவந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை என்று துருக்கி குற்றஞ்சாட்டி கடுமையாக சாடியுள்ளது.
இந்தாண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒன்றியத்தில் துருக்கி உறுப்பினர் ஆவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகள் வேகப்படுத்தப்படும் என்றும், உதவிகள் வழங்கப்படும் என்றும் துருக்கிக்கு உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கு கைமாறாக ஐரோப்பாவிற்குள் நுழையும் குடியேறிகளை கட்டுப்படுத்த துருக்கி ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தம் காரணமாக பால்கன் பகுதி வழியாக ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைந்த குடியேறிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
Post a Comment