ஜனாதிபதியிடம் திட்டுவாங்கிய, பொலிஸ்மா அதிபர்
பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையாக திட்டியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் கே.எல்.எம்.சரத்சந்திரவை நீதிமன்றில் ஆஜர்படுத்தியமை தொடர்பில் ஜனாதிபதி அதிருப்பதி வெளியிட்டுள்ளார்.
பொலிஸ் நிலையத்தினுள் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் பிரதி பொலிஸ் மா அதிபரை, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுகின்றமை தொடர்பில் தான் வருத்தம் தெரிவிப்பதாக ஜனாதிபதியிடம், பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
கோடி கணக்கான பணத்தை மோசடி செய்தவர்கள் சுதந்திரமாக செயற்படும் போது, கடந்த யுத்த காலக்கட்டத்தில் திறமையாக செயற்பட்ட அதிகாரியை இவ்வாறு நடத்தியமை தவறு என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த அதிகாரியுடன் தனிப்பட்ட ரீதியில் பிரச்சினைகள் காணப்பட்டால் அவற்றினை தனிப்பட்ட ரீதியில் தீர்த்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிபடைக்கு சொந்தமான ஜீப் வண்டி ஒன்றை ஓய்வு பெற்றதன் பின்னர் பயன்படுத்தியமைக்கு 140,000 ரூபாய் பணத்தை தவறாக பயன்படுத்திமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி கே.எல்.எம்.சரத்சந்திரவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Post a Comment