Header Ads



பிக்குகள் இணைந்து தனி 'நிகாய' உருவாக்க நடவடிக்கை

கடந்த அரசாங்க காலத்தில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்ட முற்போக்கு பிக்குகளின் அமைப்புக்கள் பல ஒன்றாக இணைந்து தனியான தேரர்கள் பிரிவொன்றை (நிகாய) உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த பிக்குகள் அமைப்பு, கடந்த அரசாங்க காலத்தில் நாடு, இனம் மற்றும் சமயம் என்பன தொடர்பில் மக்களை எழுச்சிபெறச் செய்த ஒரே கருத்தை பிரதிநிதித்துவம் செய்த குழுவாக கூறப்படுகின்றது.

அவ்வாறு தனித்தனியாக பிரிந்திருந்து தமது போராட்டத்தை முன்னெடுப்பதன் ஊடாக கிடைக்கும் முடிவை விடவும், ஒன்றுபட்டு புதிய தலைமையின் கீழ் தமது கருத்தை முன்வைப்பதுதான் பொருத்தமானது என இந்த பிக்குகள் அமைப்புக்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைக்கு கடந்த 2 மாத காலமாக இந்த அமைப்புக்கள் ஒன்றாக ஒன்றிணைந்து நீண்ட கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருகின்றது.

பிரதேச மட்டத்தில் பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு எதிராக செயற்பட்ட சிறிய பிக்குகள் குழுக்களும், தேசிய மட்டத்தில் செயற்படும் பௌத்த பிக்குகள் குழுக்களும் இந்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய பிக்குகள் பிரிவொன்றை (நிகாய) பிரகடனப்படுத்தியதன் பின்னர், அதற்கு மகாநாயக்க தேரராக யாரை நியமிப்பது என்பது, தொடர்பில் கலந்துரையாடல்களில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்காக தற்போதைக்கு தேசிய ரீதியில் செயற்படும் பல பிக்குகள் அமைப்புகளிலிருந்து அதற்கான பெயர்கள் முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

7 comments:

  1. Bauddha madaththey adhan thooya wadivil uraththa kuralil kaththakudiya kumbalondru seykiraarkal pola

    ReplyDelete
  2. Everyone in the world realizes the need for 'unity' except MUSLIMS!

    ReplyDelete
    Replies
    1. First of all tell your racist Tamils first.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Tamil brothers and sisters, take it easy on the soul with the name Yusuf Ismath that needs medical attention!

    ReplyDelete
    Replies
    1. Generally non-Muslims have Satanism in their heart.

      Delete
  5. please remove Yusuf Ismath comment. you are the racist here

    ReplyDelete

Powered by Blogger.