யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில், நடைபெற்ற நிகழ்வு
-பாறுக் ஷிஹான்-
யாழ் ஒஸ்மானியா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 2016ம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கெளரவித்தலும் பரிசில்கள் வழங்கலும் நிகழ்வு நடைபெற்றது.
மேற்படி நிகழ்வானது 2016ம் ஆண்டு புலமைப்பரீட்சைக்கு தோற்றி அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவன் என்.எம் இமாஸ் ( புள்ளிகள் 159 ) மற்றும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் 15 புள்ளிகள் 70 – 100 இற்கு இடைப்பட்ட மாணவர்கள் 22 புள்ளிகள் 70 இற்கு குறைந்த புள்ளிகளை பெற்ற மாணவர்கள் 15 ஆகிய படிமுறைகளில் கௌரவிக்கப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டது.
அத்தோடு 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு பொறுப்பான சபீலா ஹைபல் சப்னா ரிஸ்வான் ஆகிய இரண்டு ஆசிரியைகள் மற்றும் ஆரம்ப பிரிவுக்கு பொறுப்பான 7 ஆசிரியைகளும் கௌரவிக்கப்பட்டனர் .
மேலும் 2002ம் ஆண்டிற்குப்பின் யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் க.பொ.த சா.தரம் வரை கல்விகற்று இன்று பல்கலைகழகம் சென்று பட்டப்படிப்பை தொடர்ந்துவரும் 'நசார் பாத்திமா நஸீரா' முகாமைத்துவ பிரிவு யாழ் பல்கலைகழகம் 'ரமீஸ் பாத்திமா ஸிபா' ஆயுர்வேத மருத்துவ வைத்திய பிரிவு களனி பல்கலைகழகம் ஆகிய இரண்டு மாணவிகளும் பிரதம அதிதிகளாக அழைக்கப்பட்டு அவர்களூடாக மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கல்வியின் முக்கியத்துவம் பற்றிய சொற்பொழிவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
2017ம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
Post a Comment