Header Ads



இலங்கையும், எதியோப்பியாக மாற்றமடையும் என எச்சரிக்கை


இலங்கையும் எத்தியோப்பியா போன்று மாற்றமடையக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் சுற்றாடல் விஞ்ஞான பேராசிரியர் பீ.ஐ. யாபா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மத்திய மலை நாட்டில் பாரியளவில் மண் அரிப்பு பதிவாகி வருவதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு மண் அரிப்பு ஏற்படுவது இலங்கையை மற்றுமொரு எதியோப்பியாவாக வரண்ட பூமியாக மாற்றும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற செயலமர்வு ஒன்றில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

எதிர்வரும் இரண்டு தசாப்த காலத்தில் மண் அரிப்பினை தடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் மண் அரிப்பை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட முடியும். சீனாவில் வரண்ட பூமிகளில் மரங்கள் நாட்டப்பட்டு வருகின்றன.

மலைப் பாங்கான பிரதேசங்களில் மண் அரிப்பு ஏற்படுவதனை தடுக்க மரங்கள் நாட்டப்பட வேண்டியது அவசியமானது.

இலங்கைக்கு உரிய மரங்கள் நாட்டப்பட வேண்டுமே தவிர இறக்குமதி செய்பய்படும் தாவரங்கள் நாட்டப்படுவதனால் வேறும் பிரச்சினைகள் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. வேலைவெட்டி இல்லாததால் மக்களை குளப்புவோர் அதிலிருந்து விலகி அனைவருடனும் இணைந்து மரம்நடுதல்மூலம் ஒற்றமையின் உன்மயான பலனை அனுபவிக்கலாம்...

    ReplyDelete
  2. HOPE politician will not import trees to earn commissions. They should leave environmental issues to those who have knowledge in that field and support their discussions based on research findings and facts.

    ReplyDelete

Powered by Blogger.