இனவாதத்தை கட்டுப்படுத்த, சட்டம் கொண்டுவாருங்கள் - ரிஷாட்
(எம்.சி.நஜிமுதீன்)
நாட்டில் பல்வேறு வழிகளில் இனவாத செயற்பாடுகள் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சமாதானத்தை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய சமயத் தலைவர்கள் இனவாத்தை தூண்டும் வகையில் செய்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆகவே இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் தற்போது நிலைகொண்டுள்ள சமாதானத்தை குழப்பும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு புதிய சட்ட ஏற்பாடுகளை உருவாக்கி அதன்மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க,சட்டம் ஒழுங்கு தொடர்பிலான அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment