முஸ்லிம்களின் உரிமையில், தலையிடும் ஞானசாரா..!
சுதந்திர நாட்டில் ஒரு சமூகத்தின் ஜனநாயக உரிமைகள் பாதிக்கப்படும் வகையில் கருத்துக்களை வெளியிடும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் பகிரங்கமாக கண்டிக்கப்பட வேண்டியவர்...!
இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் முஸ்லிம் திருமண அடிப்படை சட்ட மாற்றம் பற்றி முஸ்லிங்கள் தங்களின் நிலைப்பாடுகளையும் அதிருப்தியையும் வெளிப்படையாக பேசிக்கொண்டு இருக்கும் இச்சந்தர்ப்பத்தில், முஸ்லிங்கள் பற்றி பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் அண்மையில் பேசிய போது "முஸ்லிங்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்" என தெரிவித்து இருப்பது முஸ்லிங்களை அவமதித்திருப்பது மட்டுமில்லாமல் முஸ்லிங்களின் சுதந்திரத்திலும் தனித்தன்மையிலும் அடாத்தாக உள்நுழைந்து பேசி இருக்கிறார். இது பகிரங்கமாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
கடந்த ஜனாதிபதியின் ஆட்சி காலத்தில் பெரும்பான்மை பேரினவாதிகளின் பேச்சுக்களால் முஸ்லிம் சமூகம் அனுபவித்த கொடுமைகளும் வேதனைகளும் முஸ்லிங்களின் மனதைவிட்டு இன்னும் அகலவில்லை. இந்நிலையில் மீண்டும் இவர்களின் பேச்சுக்கள் விஸ்பரூபம் எடுத்து இருக்கிறது.
சிவில் சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் இதனை பகிரங்கமாக கண்டிக்க வேண்டும். பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளரின் இப்பேச்சுக்கு எதிராக கண்டன அறிக்கைகளையும் விட வேண்டும்.
ஒரு நாடு சுதந்திரம் அடைந்துள்ளது என்றால், அந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு சமூகமும் சுதந்திரத்தை சுவைக்க வேண்டும். பெரும்பாண்மை என்றாலும் சிறுபான்மை என்றாலும் சுதந்திரம் யாவருக்கும் ஒன்றே. ஒரு சமூகத்தின் உரிமை கலாச்சாரம் தனித்தன்மை கேள்விக்கு உட்படுகிறது என்றால் அங்கே சுதந்திரம் மலினப்படுத்தப்படுகிறது.
இன்று இலங்கையை பொறுத்த மட்டில் சுதந்திரம் பெயரளவில் மட்டுமே காணப்படுகிறது. பெரும்பான்மை பேரினவாத சக்திகளின் செயற்பாடுகள் யாவும் சிறுபான்மை சமூகங்களை அடக்கி ஆள எத்தனிப்பதாகவே அமைகிறது. துரதிஷ்டம் நல்லாட்சி எனும் பேரில் இயங்கும் அரசாங்கம் மக்களிடம் அவப்பெயரையே பெற்று கொண்டு, "மக்களுக்காக அரசியல்" எனும் கருப்பொருளுடன் ஆட்சிபீடமேறி அசிங்கங்களை இணைத்து கொண்டு பழைய நிலையையே தொடர்கிறது.
முஸ்லிங்கள் இந்த நாட்டினை நேசிப்பவர்கள். தங்களது தேசத்தை பாதுகாப்பதற்காக முன்னின்று உழைத்த எத்தனையோ வரலாறுகள் உள்ளது. இலங்கை முஸ்லிங்கள் தேசத்துரோக செயல்களுக்கும் ஆதரவாக இயங்கிய வரலாறே கிடையாது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஈழக் கோரிக்கையை கூட எதிர்த்து பேசியவர்கள். ஒரே நாடு ஒரே தேசம் ஒரே மக்கள் என்ற கொள்கையோடு பயணித்தவர்கள். பிளவுகளுக்கு அடிமைப்படாமல் ஒற்றுமையோடு அனைவருடனும் கைகோர்த்து வாழ்ந்தவர்கள்.
விடுதலை புலிகளை எதிர்த்த காரணத்தினால் பாசிச புலி பயங்கரவாம் வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்கள் மீது மேற்கொண்ட கொடூரமான தாக்குதல்களும் அதனால் உருவான வடுக்களையும் இன்றும் சுமந்து கொண்டு இருப்பவர்கள்.
இப்படியான சமூகத்தின் மீது பேரினவாத கெடுபுடிகளையும் அடக்குமுறைகளையும் கையாள நினைப்பது வன்மையா கண்டிக்கப்ப வேண்டிய விடயம் ஆகும்.
-மனாப் அஹமத் றிசாத் -
SANDIRANAI PARTHU NAAI KULAITHAL ENNA??SANDRIAN MAARI VIDUMA?DONT WORRY.AHAMED RISHADH
ReplyDeleteBauddharkalaal niraakarikka pattawar eday sonnaalum kandukollak koodadhu. awaray edirpadu awarukkusseyyum udhawiyaakum
ReplyDeleteஇவன்ட வாய்ல சூ விடனும்
ReplyDeleteஅல்லாஹ் இவனை நல்வழிப்படுத்துவானாக!!
ReplyDelete