Header Ads



பாலியல் வல்லுறவு செய்தால், தண்டனை கிடையாது என்ற மசோதாவை திரும்பபெற்றது துருக்கி

துருக்கி நாட்டின் ஜனாதிபதியான எர்டோகன் கட்சி கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்தது. அதில், ‘18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகளை ஆண்கள் கற்பழித்து விட்டு பிறகு அவர்களையே திருமணம் செய்துக்கொண்டால் அதற்கு தண்டனை கிடையாது’ என அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், இதில் ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, சிறுமியை மிரட்டி அல்லது பலவந்தமாக கற்பழித்தால் மட்டும் அது தண்டனைக்குரிய குற்றம் எனவும் அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைப்பருவத்தில் திருமணம் செய்து வைக்கும் பழக்கம் பரவலாக இருப்பதால், இதற்கு தீர்வு காணும் நோக்கத்தில் இந்த சட்டம் கொண்டு வரப்படுவதாக அரசு கூறுகிறது. ஆனால், குழந்தை பாலியல் வல்லுறவை இது சட்டப்பூர்வமாக்கும் என்று விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்

இந்த மசோதாவிற்கு துருக்கி நாட்டின் பல்வேறு உரிமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த மசோதா குறித்து விமர்சகர்கள் கூறுகையில், “துருக்கி நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில், இதுபோன்ற சட்டங்கள் குற்றங்களை மேலும் அதிகரிக்கும்.

ஒரு பெண் கற்பழிக்கப்பட்ட பிறகு அவர் மிரட்டப்பட்டாரா? பலவந்தப்படுத்தப்பட்டாரா? என்பதை நிரூபிப்பது கடினம். ஒரு பெண்ணை அடைய விரும்பும் ஒரு ஆண்மகன் அவரை கற்பழித்து விட்டால் போதும் அவள் தனக்கு கிடைத்துவிடுவார் என்ற தவறான எண்ணம் ஆண்கள் மத்தியில் அதிகரித்துவிடும்.

மேலும், 18 வயதுள்ள சிறுமிக்கு இந்த புதிய சட்டம் பொருந்தும் என்பதால், இதன் மூலம் குழந்தை திருமணத்தை அரசாங்கமே ஆதாரிப்பது போன்ற ஒரு நிலை ஏற்பட்டு விடும்” என்றனர்.

இதனிடையே, ஆளும் கட்சி கொண்டு வந்த சர்ச்சைக்குரிய இந்த புதிய சட்ட மசோதாவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்தது.  இதையடுத்து குழந்தை திருமண மசோதா மீது பாராளுமன்றத்தில் இன்று இறுதி வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக கடும் எதிர்ப்பு நிலவி வந்ததால், துருக்கி அரசு மசோதாவை திடீரென திரும்ப பெற்றது.

வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சற்று முன்பாக துருக்கி பிரதமர் பினாலியில்டிரிம் மசோதாவை திரும்ப பெறுவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த மசோதா துருக்கி பாராளுமன்ற கமிட்டியின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. If they are suitable for Caliphat, why they not implement ISLAMIC law ?

    May Allah Guide the Muslim Rulers toward Islamic way of life.

    ReplyDelete
  2. இது தவறான செய்தி இப்படி ஒரு தண்டனையை துருக்கி அரசு அறிவித்தது கிடையாது

    ReplyDelete

Powered by Blogger.